Astrology: சுக்கிர பகவானுக்கு மிகவும் பிடித்த 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா? இவங்களுக்கு பணம் சேர்ந்துட்டே இருக்குமாம்.! உங்க ராசி இருக்கா?

Published : Jan 28, 2026, 02:29 PM IST

Lord Sukran Favourite Zodiac Signs: வேத ஜோதிடத்தின்படி, செல்வம், காதல் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கு அதிபதியான சுக்கிர பகவானின் ஆசி பெற்ற ஐந்து ராசிகளைப் பற்றியும், அவர்களின் சிறப்பம்சங்கள் குறித்தும் கீழே விரிவாகக் காண்போம். 

PREV
16
சுக்கிர பகவானுக்கு பிடித்த ராசிகள்

சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் வலுவாக இருந்தால், அந்த நபருக்கு வாழ்க்கையில் அனைத்து விதமான சுகபோகங்களும் கிடைக்கும். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாக இருக்கிறார். இவர் மீன ராசியில் உச்சம் பெறுகிறார். அதாவது மீன ராசியில் சுக்கிரனின் பலம் அதிகமாக இருக்கும். சுக்கிரனின் ஆசிபெறும் ராசிக்காரர்கள் பொதுவாகவே ஆடம்பரம், செழிப்பு, கலைத்திறன் மற்றும் உறவுகளில் வெற்றியைப் பெறுகின்றனர்.குறிப்பாக பின்வரும் ஐந்து ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் அருள் எப்போதும் கூடுதலாக இருக்கும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
1. ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதியே சுக்கிரன் தான். இதனால் இவர்கள் பிறப்பிலேயே சுக்கிரனின் அருளைப் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் வசதியான வாழ்க்கையை விரும்புவார்கள். கலை, இசை மற்றும் உணவின் மீது இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். பொருளாதார ரீதியாக நிலையான இடத்தைப் பிடிப்பதுடன், உறவுகளில் நேர்மையாகவும் இருப்பார்கள்.

36
2. துலாம்

சுக்கிரன் ஆட்சி செய்யும் மற்றொரு ராசி துலாம். இந்த ராசிக்காரர்கள் மிகவும் நாகரீகமானவர்களாகவும், அனைவரிடமும் சமநிலையுடன் பழகுபவர்களாகவும் இருப்பார்கள். கவர்ச்சியான தோற்றமும், இனிமையான பேச்சுத் திறனும் இவர்களுக்கு இயல்பாகவே அமையும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இவர்கள் அதிக மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள்.

46
3. மீனம்

மீன ராசியில் சுக்கிரன் உச்சம் பெறுகிறார், அதாவது தனது முழு பலத்தையும் இங்கே வெளிப்படுத்துகிறார். இதனால் மீன ராசிக்காரர்கள் அதிக கற்பனைத் திறனும், ஆன்மீக சிந்தனையும் கொண்டவர்களாக இருப்பார்கள். கலை மற்றும் இசைத்துறையில் இவர்களுக்கு வெற்றி நிச்சயம். மற்றவர்களிடம் அதிக கருணையும் அன்பும் கொண்டவர்களாக இவர்கள் விளங்குவார்கள்.

56
4. விருச்சிகம்

விருச்சிக ராசியானது சுக்கிரனுக்கு ஒரு நட்பு ராசியாகும். சுக்கிரன் சாதகமாக இருக்கும்போது, இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆழமான காதலையும், உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பையும் கொண்டிருப்பார்கள். கடினமான முடிவுகளைத் துணிச்சலாக எடுக்கும் திறன் இவர்களுக்கு உண்டு. இவர்கள் செல்வச் செழிப்புடன் வாழும் யோகத்தைப் பெறுவார்கள்.

66
5. மகரம்

சுக்கிரனுக்கு மகர ராசியும் ஒரு நட்பு வீடாகும். இந்த ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பின் மூலம் பெரிய நிலையை அடையும் யோகத்தை சுக்கிரன் தருகிறார். இவர்கள் மிகவும் நம்பகமானவர்கள் மற்றும் நீண்ட கால உறவுகளைப் பேணுவதில் வல்லவர்கள். நிதி மேலாண்மையில் சிறந்து விளங்குவதால், இவர்களிடம் செல்வம் எப்போதும் நிலைத்திருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories