ஜோதிட சாஸ்திரத்தில் லட்சுமி நாராயண யோகம் மிகவும் மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த ராஜ யோகமாக கருதப்படுகிறது. இந்த ராஜயோகம் வருகிற ஆகஸ்ட் 21 கடக ராசியில் உருவாக இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
லட்சுமி நாராயண யோகம் செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி மற்றும் பாதுகாப்பின் தெய்வமான நாராயணனின் அருளை பிரதிபலிக்கும் ஒரு ஜோதிட சேர்க்கை ஆகும். இந்த யோகம் செல்வம், ஆடம்பரம், அழகு மற்றும் காதலின் கிரகமான சுக்கிரன் மற்றும் புத்தி, தொடர்பு, வணிகம் மற்றும் அறிவின் கிரகமான புதன் ஆகிய கிரகங்கள் ஒரே ராசியில் இணையும் போது உருவாகிறது. இந்த சேர்க்கையானது நிதி முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, குடும்ப நல்லிணக்கம் மற்றும் ஆன்மீக பயணத்தில் முன்னேற்றத்தை வழங்குவதாக அறியப்படுகிறது. ஆகஸ்ட் 21, 2025 அன்று சுக்கிரன் கடக ராசியில் சஞ்சரிக்கும் பொழுது இந்த யோகம் கடக ராசியில் உருவாக உள்ளது. கடகம் ஒரு நீர் ராசியாகவும் உணர்ச்சி, குடும்பம், பாதுகாப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாகவும் இருப்பதால் இந்த யோகம் கூடுதல் நன்மைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.
25
கடக ராசி
இந்த லட்சுமி நாராயண யோகம் சில ராசிகளுக்கு நன்மைகளை வழங்க உள்ளது. கடக ராசியில் இந்த யோகம் உருவாவதால் கடக ராசிக்காரர்களுக்கு இது சிறப்பான பலன்களைத் தரவுள்ளது. கடக ராசிக்காரர்களின் நிதி நிலைமைகள் வலுவடையும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். தொழில் செய்து வருபவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, புதிய வேலைவாய்ப்புகள் அல்லது வணிகத்தில் விரிவாக்கம் ஏற்படலாம். குடும்பத்தில் அன்பும், ஒற்றுமையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் ஏற்படும். லட்சுமி மற்றும் நாராயணர் வழிபாடு, வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்கு சென்று நெய் தீபம் ஏற்றுதல் ஆகியவை இந்த பலன்களை மேலும் வலுப்படுத்தும்.
35
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களின் வருமானம் மற்றும் குடும்ப ஸ்தானமான இரண்டாவது வீட்டில் புதனும், சுக்கிரனும் அமர இருக்கின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு செல்வம் மற்றும் தொழில் தொடர்பான வெற்றிகள் கிடைக்க உள்ளது. பணவரவு அதிகரிக்கும். பங்குச்சந்தை, வணிக முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் மரியாதை மற்றும் அங்கீகாரம் உயரும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம், குறிப்பாக புதிய உறவுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. கலைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு இந்த யோகம் சிறப்பான பலன்களைத் தரும். கடந்த காலத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து அமைதியான சூழல் நிலவும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி ஆலயங்களில் வழிபாடு செய்வது மிகுந்த பலன்களை தரும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகம் ஒன்பதாவது வீட்டில் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகம் நல்ல பலன்களைத் தரும். தொழில், தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் அவர்களுக்கு ஏற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தொழில் செய்து வருபவர்களுக்கு வணிகத்தில் லாபங்கள் இரட்டிப்பாகும். இந்த மாதம் அவர்களின் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கு அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். புதிய முதலீடுகள், சொத்து அல்லது நிலம் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படலாம். விஷ்ணு மற்றும் மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்ல பலன்களை தரும்.
55
மீன ராசி
மீன ராசியின் ஐந்தாவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாவதால் மீன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சிறப்பான பலன்களை அளிக்க உள்ளது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் இரு மடங்காக பெருகும். தொழில் விரிவாக்கம் செய்யலாம். நிதி ஸ்த்திர தன்மை அதிகரிக்கும். பணம் சேமிப்பதற்கு சிறந்த காலமாக இருக்கும். திருமண வாழ்க்கை மற்றும் புதிய உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். சுக்கிர பகவானுக்கு வெள்ளை மலர்கள் சாற்றி வழிபாடு செய்வது மிகுந்த பலன்களைத் தரும். இந்த ராசிகளுடன் தனுசு, மகரம், துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கும் லட்சுமி நாராயண யோகம் நல்ல பலன்களைத் தரவுள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை. இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இவை பொதுவான பலன்களே ஆகும். ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து பலன்கள் மாறுபடும் என்பதால் அனுபவம் மிக்க ஜோதிடரை அணுகி கலந்தாலோசிப்பது நல்லது)