கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் கலவையான முடிவுகள் கிடைக்கும். காலையில் இலக்குகளை நிர்ணயிப்பதற்கும், மாலையில் நிதானம் மற்றும் சிந்தனைக்கும் பயன்படுத்தவும்.
கடின உழைப்புக்கான அங்கீகாரம் மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கும். உங்களின் செயல்கள் மற்றவர்களால் கவனிக்கப்படும். சகிப்புத்தன்மையுடனும், பொறுமையுடனும் இருப்பது தடைகள் நீங்க உதவும்.
நிதி நிலைமை:
இன்றைய தினம் முதலீடுகள் மற்றும் வீட்டுச் செலவுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். பங்குச்சந்தை போன்ற பல்வேறு முயற்சிகளில் முதலீடு செய்வது திருப்தியையும் பணம் வரவையும் தரும். தூண்டுதலின் பேரில் பண முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பொறுமையையும் அமைதியையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
உங்கள் துணையுடன் இனிமையான உரையாடல்களை பகிர்ந்து கொள்வீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். உணர்ச்சிவசப்படுவதை விட அமைதியாக இருப்பது நன்மை தரும். துணையின் உணர்வுகளை முழுமையாக கேட்டு அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ளுங்கள். இன்று வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அன்பும், நல்லிணக்கமும் மேம்படும்.
பரிகாரங்கள்:
சனிக்கிழமை என்பதால் சனி பகவானை வழிபடுவது நல்லது. சிவனின் ருத்ர ரூபத்தை வழிபடுவது சிறந்தது. இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நேர்மறை பலன்களைக் கூட்டும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.