Kumba Rasi Palan Nov 26: கும்ப ராசி நேயர்களே, இன்று கிடைக்கும் அதிர்ஷ்டம்.! தொட்டது எல்லாம் பொன்னாகும்.!

Published : Nov 25, 2025, 02:30 PM IST

Nov 26 Kumba Rasi Palan: நவம்பர் 26, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
நவம்பர் 26, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் மிகுந்த சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். புதிய திட்டங்களை செயல்படுத்த சிறந்த நாளாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு ஏற்ற வெற்றிகள் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

நிதி நிலைமை:

இன்று நிதி வரவு சாதகமாக இருக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையற்ற ஆடம்பரச்ஞ செலவுகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து யோசிப்பீர்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழல் நிலவும். குடும்ப பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.

பரிகாரங்கள்:

இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் விசேஷம். தடைகளை விலகவும், ஆற்றல் அதிகரிக்கவும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள். ஏழை அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories