கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் குருவின் நிலை காரணமாக பண வரவு, குடும்பம், ஆரோக்கிய அம்சங்களில் சாதகமான மாற்றங்கள் உருவாகும். உங்கள் இலக்குகளை நோக்கி தெளிவாகவும், உறுதியுடனும் செயல்படுவீர்கள். உங்கள் பொறுப்புகள் மற்றும் பணியிடத்தில் திருப்தியை காண்பீர்கள். இதன் காரணமாக உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கலாம்.
நிதி நிலைமை:
நிதி நிலைமையில் ஸ்திரத்தன்மை இருக்கும். கடந்த கால முதலீடுகளில் இருந்து பலன் கிடைக்கலாம். அவசரப்பட்டு ஆபத்தான முதலீடுகளை எடுப்பதை தவிர்க்கவும். நிதானமாக செயல்படுங்கள். இன்று கடன் கொடுப்பது/வாங்குவதை தவிர்த்து விடுங்கள். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
உங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்னோன்யம் அதிகரிக்கும். இணக்கமான சூழல் நிலவும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை வழி உறவுகளில் இருந்த மன வருத்தங்கள் நீங்கி சுமூகமான நிலை ஏற்படும். உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்தி அமைதியான அணுகுமுறையை கடைபிடிப்பது உறவுகள் பலப்படுவதற்கு உதவும்.
பரிகாரங்கள்:
சனி பகவானின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கு அனுமனை வழிபடுவது நல்லது. காரியங்களில் ஏற்படும் தடைகள் விலக விநாயகருக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகள் அல்லது ஒரு வேளை உணவுக்கான மளிகை சாமான்கள் வாங்கி கொடுப்பது நேர்மறை பலன்களை கூட்டும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.