கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் முழுவதும் இணக்கம், ஆசீர்வாதம் மற்றும் நேர்மறையான வளர்ச்சி காணப்படும். உணர்ச்சிப்பூர்வமான இணைப்பு மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மற்றும் பெரியவர்களிடமிருந்து ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். இருப்பினும் உடல் நலனில் சற்று கவனம் தேவை.
நிதி நிலைமை:
இன்று நிதி நிலைமை நிலையானதாக இருக்கும். படிப்படியான வளர்ச்சிக்கு சாத்தியம் உண்டு. குடும்பத்தினர் அல்லது உறவினர்களிடமிருந்து நிதி உதவி கிடைக்கும். இதன் காரணமாக மன அழுத்தம் குறையும். கூட்டு முயற்சிகள் அல்லது குடும்ப சொத்துக்களில் இருந்து லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆடம்பரப் பொருட்களில் செலவு செய்வதை தவிர்த்து விடுங்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்று குடும்ப உறவில் காதல் மற்றும் பாசம் நிறைந்த நாளாக இருக்கும். உறவுகளில் அன்னோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வெளியில் செல்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். தனியாக இருப்பவர்களுக்கு புதிய காதல் உறவுகள் உருவாகலாம். திருமணமாகாதவர்களுக்கு குடும்பத்தினர் அல்லது நெருங்கிய உறவினர்கள் மூலம் திருமண யோசனைகள் வரலாம்.
பரிகாரங்கள்:
குரு பகவானின் அதிசார பெயர்ச்சி நடைபெற இருப்பதால் இன்று குரு பகவானை வணங்குவது நல்லது. தடைகள் நீங்க விநாயகரை வணங்கலாம். சிவபெருமானை வணங்குவது மனதிற்கு அமைதியைத் தரும். ஏழைகள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வது அல்லது உணவு அளிப்பது நற்பலன்களைத் தரும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.