கிருஷ்ணரின் பிறந்தநாள் இந்தியாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், மக்கள் கிருஷ்ணரைப் பிரியப்படுத்த விரதம் மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் கிருஷ்ண பக்ஷத்தின் எட்டாவது நாளில் இது கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணரை வழிபடுவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். இந்து நாட்காட்டியின் படி, இந்த நாளில் கிருஷ்ணரை வழிபட வேண்டும். இன்று பகல் 12 மணிக்கு இறைவனை வழிபடுகின்றனர். ஆனால் இன்று உங்கள் வீட்டில் சில பொருட்களை கொண்டு வந்தால் கிருஷ்ணர் மிகவும் மகிழ்ச்சி அடைவார். மேலும், உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். கடவுளின் அருளும் கிடைக்கும். குறிப்பாக இதனால் உங்கள் வீட்டில் எதற்கும் குறைவிருக்காது. இதற்கு உங்கள் வீட்டிற்கு என்ன பொருட்களை கொண்டு வர வேண்டும்?