Ketu Transit: திடீர் பண வரவு.. தொட்டதெல்லாம் துலங்கும்.. கேதுவின் கிருபையால் 4 ராசிகளுக்கு ஜாக்பாட்!

Published : Jul 31, 2026, 02:21 PM IST

Ketu Transit 2026: கேது பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு திடீர் பணவரவு, அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

PREV
15
கேதுவின் கிருபையால் 4 ராசிகளுக்கு ஜாக்பாட்

வேத ஜோதிடத்தில் 'நிழல் கிரகம்' என்றும், ஞானம் மற்றும் ஆன்மீகத்தின் காரகனாகவும் விளங்குபவர் கேது பகவான். இவர் மற்ற கிரகங்களைப் போல நேர்கதியில் செல்லாமல், எப்போதும் பின்னோக்கிய வக்ர கதியிலேயே பயணிக்கும் இயல்புடையவர். கேதுவிற்கு என்று தனியாக சொந்த ராசிகள் ஏதும் இல்லை என்றாலும், ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை தங்கி தன் பலன்களைத் தருவார்.

ஒரு மனிதனின் வாழ்வில் நிகழும் திடீர் திருப்பங்கள், எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் பூர்வ புண்ணிய பலன்களுக்கு கேதுவே காரணமாகிறார். தற்போது கேது பகவான் சூரியனின் சிம்ம ராசியில், மகம் நட்சத்திரத்தில் சஞ்சரித்து வருகிறார். வரவிருக்கும் டிசம்பர் மாதம் வரை இந்த நட்சத்திரப் பயணத்தில் இருக்கும் கேதுவால், அளப்பரிய நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும் பெறப்போகும் 4 ராசிகளைப் பற்றி இங்கு காண்போம்:.

25
மேஷம்

மேஷ ராசிக்கு 5-ஆம் இடமான பூர்வ புண்ணியஸ்தானத்தில் கேது அமைந்திருப்பது மிகச் சிறந்த யோகத்தைத் தரும். நிதி நிலைமை முன்பை விட கணிசமாக உயரும். புதிய வழிகளில் பணம் வந்து சேரும். அலுவலகத்தில் இருந்த சிக்கல்கள் விலகி, சுமுகமான சூழல் நிலவும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். உங்கள் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும்.

35
கடகம்

கடக ராசிக்கு 2-ஆம் வீடான தன மற்றும் குடும்ப ஸ்தானத்தில் கேதுவின் சஞ்சாரம் சிறப்பான பலன்களை அள்ளித் தரும். தொழிலில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளும், பதவியுயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. அனுபவம் மிக்க பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்பட்டால், வியாபாரத்தில் அபார வளர்ச்சியைக் காணலாம்.

45
சிம்மம்

கேது பகவான் உங்கள் ராசியிலேயே (ஜென்ம ராசி) பயணம் செய்வதால், உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் பெயரும் புகழும் உயரும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு மனக்கசப்புகள் வந்து சென்றாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. டிசம்பர் வரை அவசரப்பட்டு எந்தவித பெரிய முடிவுகளையும் அல்லது பெரிய முதலீடுகளையும் செய்யாமல் யோசித்துச் செயல்படுவது நல்லது.

55
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த கேது பெயர்ச்சி நிதி ரீதியாக மிகப்பெரிய நிம்மதியைத் தரும். நீண்ட காலமாக வராமல் முடங்கிக்கிடந்த கடன்கள் மற்றும் நிலுவை தொகைகள் கைக்கு வந்து சேரும். ஏற்கனவே நீங்கள் செய்த முதலீடுகளிலிருந்து எதிர்பாராத அளவிற்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் படிப்படியான நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். எனினும், அவசர முடிவுகளைத் தவிர்ப்பது மேலும் நன்மையளிக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories