Ketu Magham Natchathira Peyarchi 2026 : கேது பகவான் மார்ச் 29 ஆம் தேதி தனது சொந்த நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தில் கேது பகவான் ஒரு மர்மமான மற்றும் நிழல் கிரகமாக அறியப்படுகிறார். இவர் திடீர் மாற்றங்கள், ரகசியமான விஷயங்கள், பற்றின்மை, ஞானம், மோட்சம் ஆகியவற்றை குறிக்கிறார். கேது ஒருவர் ஜாதகத்தில் பலமாக இருந்தாரல் அந்த நபர் ஆன்மீகத்தில் சிறந்து விளங்குவார். ஞானத்துடன் விளங்குவார். ஆசைகள் மீது பற்றின்மையுடன் இருப்பார். அதே சமயம் கேது அசுபமாக இருந்தால் மனக் குழப்பம், தேவையற்ற பயம், திடீர் இழப்புகள், கருத்து வேறுபாடு, வேலைகளில் தாமதங்கள் ஏற்படலாம்.
25
ஞானகாரகன் கேது பகவான்
கேது பகவானுக்கு சொந்தமாக ராசி எதுவும் இல்லை. ஆனால் இவர் அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதியாக விளங்குகிறார். இந்த நிலையில் அவர் மார்ச் 29ஆம் தேதி சிம்ம ராசியில் இருக்கும் தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். அவரின் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்க உள்ளது. ஞானகாரகனான கேதுவின் பெயர்ச்சியால் பலன் பெற உள்ள ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
35
மேஷம்
கேதுவின் நட்சத்திரப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மைகளை தரவுள்ளது. வாழ்க்கையில் அடுத்த கட்டம் அல்லது முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் அல்லது பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். முதலீடு செய்திருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சிலருக்கு புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் உருவாகும்.
கேதுவின் நட்சத்திரப் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்குவார்கள். மகம் நட்சத்திரம் சிம்ம ராசியில் அமைந்திருப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகள் கணிசமான லாபத்தைத் தரும். வேலையிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்த தகராறுகள் முடிக்கப்படும். கடினமான வேலைகளையும் முடித்து, அதற்கான பலன்களையும் அறுவடை செய்வீர்கள்.
55
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திரப் பெயர்ச்சி சுப பலன்களை அளிக்கவுள்ளது. தொழில் ரீதியான பலன்கள் கிடைக்கக்கூடும். பணி புரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை விலகும். சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதி காத்திருக்கும் மாணவர்களுக்கு அரசு வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனம் அமைதி பெறும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)