ஜோதிடத்தில் குரு அறிவு, செல்வம், வளர்ச்சி ஆகியவற்றின் காரகராக கருதப்படுகிறார். அதே நேரத்தில் கேது ஆன்மிகம், மறைமுக லாபம், எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் திடீர் முன்னேற்றங்களை வழங்கும் கிரகமாக பார்க்கப்படுகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சாதகமான தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, கேது ஜாதகத்தில் 3, 6, 11 போன்ற உபசய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலோ அல்லது குரு போன்ற சுப கிரகங்களின் பார்வையை பெற்றிருந்தாலோ, எதிர்பாராத பணவரவு, தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு லாபங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். குரு பெயர்ச்சிக்கு பின் கேதுவின் அருளும் கிடைப்பதால் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு இந்த யோகம் சிறப்பாக அமையும்.