Gajakesari Yoga : குருவின் அருள் + சந்திரனின் பலம்... கஜகேசரி யோகத்தால் பவர்ஹவுஸ் ஆக மாறும் 5 ராசிகள் என்னென்ன?

Published : Aug 04, 2026, 08:33 AM IST

Jupiter-Moon Conjunction : சில நாட்களில், குருவும் சந்திரனும் இணையும். இந்த கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் சுப யோகம், சில ராசிகளுக்கு பெரும் வருமானத்தை வழங்கும் சக்தியை பெறும்.

PREV
16
Gajakesari Yoga

ஆகஸ்ட் மாதத்தில் பல முக்கியமான கிரக அமைப்புகள் உருவாகி ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பான காலமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் 10 அன்று சந்திரன், கடக ராசியில் இருக்கும் குருவுடன் இணைவதால் சக்திவாய்ந்த கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஆகஸ்ட் 13 வரை தொடரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

கஜகேசரி யோகம் அனைத்து 12 ராசிகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு பொருளாதாரம், தொழில், குடும்பம் மற்றும் அதிர்ஷ்டம் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்கும் என்று நம்பப்படுகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதைப் பார்ப்போம்.

Astrology: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய கிரக சேர்க்கை! பூசம் முதல் சுவாதி வரை நட்சத்திரங்களுக்கு என்ன பலன்?

26
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சாதகமான பல வாய்ப்புகளை உருவாக்கும். இதுவரை தடைபட்டிருந்த முயற்சிகள் வெற்றி பெறும் சூழல் உருவாகலாம். பணவரவு அதிகரித்து, பொருளாதார நிலை வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது.

வீடு அல்லது வாகனம் வாங்க நினைப்பவர்களின் ஆசை நிறைவேறக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வளர்ச்சி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரித்து, வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதல் ஏற்படும். வெளிநாட்டு தொடர்பான முயற்சிகளும் சாதகமான பலனை அளிக்கக்கூடும்.

36
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலம் புதிய மாற்றங்களை கொண்டு வரும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதுவரை எதிர்பார்த்த சில நல்ல செய்திகள் கிடைக்கலாம்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். காதல் வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் இருந்தால் அதற்கும் சாதகமான காலமாக அமையலாம். உடல்நலமும் சீராக இருக்கும்.

46
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணவரவில் முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகலாம்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வேகமாக முடிவடையக்கூடும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். முதலீடுகளும் நல்ல பலன் தரும் வாய்ப்பு உள்ளது.

56
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் நிதி ரீதியாக உறுதியான முன்னேற்றத்தை வழங்கக்கூடும். எதிர்பாராத வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வீடு அல்லது வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு ஏற்ற காலமாக அமையும். திருமண வாழ்க்கையில் அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். மாணவர்களும் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

66
ரிஷபம்

ஆகஸ்ட் 10 முதல் ரிஷப ராசிக்காரர்களின் பொருளாதார நிலை கணிசமாக மேம்படக்கூடும். நீண்ட காலமாக வர வேண்டிய பணம் கைக்கு வரும் வாய்ப்பு உள்ளது.

ரியல் எஸ்டேட், ஆடை, அழகு மற்றும் வணிகத் துறைகளில் இருப்பவர்கள் சிறந்த முன்னேற்றத்தை காணலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்.

புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கி, அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலம் மேலும் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories