ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் 'ராஜ குரு' என்றும், செல்வம், அதிர்ஷ்டம், அறிவு, மற்றும் உத்தியோகத்தின் காரகராகவும் குரு பகவான் விளங்குகிறார். குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். தற்போது ஒரு முக்கிய வானியல் நிகழ்வாக குரு அஸ்தமன நிலையை அடைந்துள்ளார். கடந்த ஜூலை 14 அன்று கடக ராசியில் அஸ்தமனமான குரு பகவான், வரவிருக்கும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை இதே நிலையிலேயே நீடிப்பார். இந்த 30 நாட்களும் குரு பகவானின் அஸ்தமன நிலையால், சில ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், செல்வ வளமும் பெருகப் போகிறது. அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் யார் என்பதை பார்ப்போம்.