Weekly Rasi Palan: மேஷ ராசி நேயர்களே, ராசிநாதன் செவ்வாய் தரும் அம்சம்.! தொழிலை உச்சத்தை தொடும் யோகம்.!

Published : Jan 18, 2026, 02:14 PM IST

This Week Rasi Palan Mesham: ஜனவரி 18 முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
கிரக நிலைகள்:

உங்கள் ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் வலுவான நிலையில் சஞ்சரிக்கிறார். சூரியன் பலம் பெறுவதால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். குரு மற்றும் சனியின் பார்வை ராசிக்கு சாதகமான நிலையை உருவாக்கும். ராகு, கேதுவின் நிலை சுப செலவுகளை அதிகரிக்கும்.

பொதுவான பலன்கள்:

மேஷ ராசிக்காரர்களுக்கு மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும் வாரமாக இருக்கும். ராசிநாதன் செவ்வாய் பகவானின் வலுவான நிலை காரணமாக தைரியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகம் எடுக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட உகந்த வாரமாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்தும், கௌரவமும் உயரும்.

நிதி நிலைமை:

இந்த வாரம் பொருளாதாரத்தில் தன்னிறைவு கிடைக்கும் வாரமாக இருக்கும். வாரத்தின் மத்தியில் திடீர் லாபம் அல்லது பண வரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். வீடு அல்லது வாகனம் வாங்குவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் கைகூடும்.

வேலை மற்றும் தொழில்:

ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் தொழிலில் புதிய உச்சங்களை தொடுவீர்கள். படித்து முடித்தவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். இந்த வாரம் வருமானம் பலமடங்கு உயரும். தொழில் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

குடும்ப உறவுகள்:

இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஏழரை சனியால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் சரியாகும். திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும்.

ஆரோக்கியம் மற்றும் கல்வி:

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உடல் உஷ்ணம் சம்பந்தமான விவாதிகள், வயிறு எரிச்சல், கண் எரிச்சல் ஆகியவை ஏற்படலாம். வயதானவர்களுக்கு மூட்டு வலி அல்லது தசை பிடிப்பு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். கடினமான பாடங்களையும் எளிதில் புரிந்து கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:

ஜனவரி 20 மதியம் முதல் ஜனவரி 22 இரவு வரை சந்திர பகவான் எட்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் சந்திராஷ்டம காலம் நிலவும். இந்த நாட்களில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுதிடுவதை தவிர்க்கவும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வாகனங்களில் செல்லும் பொழுது கூடுதல் கவனம் தேவை.

பரிகாரங்கள்:

செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபடுவது தடைகளை நீக்கும். ‘ஓம் நமச்சிவாய’ மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும். இயலாதவர்களுக்கு துவரை அல்லது சிகப்பு நிற ஆடைகளை தானமாக வழங்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories