கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வாரமாக அமையும். ராசிநாதன் சனி பகவான் ஜென்ம சனியாக சஞ்சரிக்கிறார். குரு பகவான் நான்காம் ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பது ஓரளவு நிம்மதியை தரும்.
வாரத்தின் தொடக்கத்தில் சூரியன், புதன் அருகே கிரகங்கள் லாப ஸ்தானத்தில் இருப்பதால் நற்பலன்கள் கிடைக்கும். இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். எந்த காரியத்திலும் துணிச்சலுடன் இறங்கி வெற்றியை ஈட்டுவீர்கள்.
நிதி நிலைமை:
இந்த வாரம் நிதி நிலைமை திருப்திகரமாக இருந்தாலும், சுப செலவுகள் வரிசை கட்டி நிற்கும். சிலருக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து விட வேண்டும் என்கிற பேராசை மேலோங்கும். ராகு பகவானின் நிலை காரணமாக சிறிய வீட்டில் வாழ்ந்த சிலர், வசதியான வீட்டுக்கு செல்வார்கள். சுப போக வாழ்க்கை அதிகரிக்கும். பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழு மூலம் சிறிய கடன் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.
ஆரோக்கியம்:
இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய வாரமாக இருக்கும். நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். உடல் அசதி அல்லது கால் வலி ஏற்படக்கூடும். சரியான நேரத்திற்கு உணவு உண்பது, போதிய உறக்கம் அவசியம். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படாமல் இருக்க வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.
கல்வி:
இந்த வாரம் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் கிடைக்கும் வரமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். ஞாபக மறதி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எழுதி படிப்பது நல்லது.
தொழில் மற்றும் வியாபாரம்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். சக ஊழியர்களைப் பற்றிய ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கூட்டாளிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்கள் வார இறுதியில் நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.
குடும்ப உறவுகள்:
கணவன் மனைவிக்கு இடையே அன்பு மேலோங்கும். குடும்ப உறுப்பினரும் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சமூகத்தில் உங்கள் புகழ் அந்தஸ்து உயரும். குழந்தைகளின் முன்னேற்றம் மன மகிழ்ச்சி தரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடல் இந்த வாரம் நடைபெறும்.
சந்திராஷ்டம நாட்கள்:
ஜனவரி 15 இரவு தொடங்கி ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் சந்திரன் ராசியின் 8 ஆம் இடமான கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் சந்திராஷ்டமம் இருக்கும். இந்த நாட்களில் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வாகன பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.
பரிகாரங்கள்:
மந்தாரை மலர் கொண்டு ராகு பகவானை அர்ச்சித்து வழிபாடு செய்வது நல்லது. ஓம் நமச்சிவாய மந்திரத்தை தினமும் 108 முறை பாராயணம் செய்யவும். ஏழை, எளியவர்கள் அல்லது முன் களப்பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகள், ஆடை தானம், அன்னதானம் செய்வது நற்பலன்களைக் கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)