மகர ராசி நேயர்களே, இந்த வாரம் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரமாகும். அஷ்டம அதிபதி சூரிய பகவான் ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் முன்கோபத்தால் பகைமை உருவாகலாம். சில முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக தலையிட்டு சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். சொத்து பிரச்சனைகள் நீதிமன்ற படி ஏற வைக்கும் என்பதால் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும் வாரமாக இருக்கலாம். கட்டிய வீட்டை பழுது பார்ப்பது அல்லது புதிய இடத்தில் வீடு கட்டுவது போன்ற நிகழ்வுகளுக்காக செலவுகள் ஏற்படக்கூடும். தன ஸ்தானத்தில் சனி பகவான் இருப்பதால் சேமிப்பு குறையத் தொடங்கலாம். புதிய முதலீடுகள் மூலம் சில நிதி இழப்புகளை சந்திக்கக்கூடும் என்பதால் அபாயமான முதலீடுகளை தவிர்த்து விடுங்கள்.
ஆரோக்கியம்:
மன அழுத்தம், தூக்கமின்மை பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அஜீரணக் கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளதால் உணவு தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நன்மை பயக்கும். முதுகு அல்லது கால் வலி இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். யோகா அல்லது தியானம் செய்வது மனதிற்கு அமைதி தரும்.
கல்வி:
மாணவர்களுக்கு இந்த வாரம் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். புதன் பகவான் நிலை காரணமாக கவனச் சிந்தனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு பெரும் உதவியாக அமையும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கூட்டாளியுடன் இணக்கமாக செல்வது லாபத்தை தரும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதற்கான வாய்ப்புகள் உண்டு.
குடும்ப உறவுகள்:
தந்தையுடன் கருத்து வேறுபாடு அல்லது தந்தை வழியில் நஷ்டம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. உண்மையான நண்பர்களையும், ஏமாற்றுப் பெயர் வழிகளையும் அடையாளம் காணக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். சகோதரருடன் பாகப்பிரிவினை சுமூகமாக முடியும்.
சந்திராஷ்டம நாட்கள்:
இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லை. எனவே பயம் இன்றி முக்கிய காரியங்களை செய்யலாம். இருப்பினும் எந்த ஒரு முடிவையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து எடுப்பது நல்லது.
பரிகாரங்கள்:
ஏற்படும் தடைகள் விலக லட்சுமி நரசிம்மரை வழிபடலாம். கடன் தொல்லைகள் நிவர்த்தி ஆவதற்கு சிவபெருமானை வழிபடலாம். ஓம் நமச்சிவாய மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யவும். இயலாதவர்களுக்கு கருப்பு உளுந்து அல்லது அன்னதானம் செய்வது சிறந்தது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)