இந்தியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. அவற்றில், சில கோயில்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் காணிக்கை குவிகிறது. நாட்டின் டாப் 5 பணக்கார கோயில்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. அவை மக்களின் ஆழமான நம்பிக்கையின் சின்னம். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதும் கோயிலுக்கு வந்து பணம், தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இதனால் தான் நாட்டின் பல கோயில்களுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நன்கொடை கிடைக்கிறது.
26
திருப்பதி கோயில்
உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி கோயில். இக்கோவில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ளது. இந்த கோயில் ஆண்டுக்கு சுமார் 650 கோடி ரூபாய் நன்கொடை பெறுகிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல டன் தங்கத்தை கோயில் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளது. இக்கோவிலில் லட்டு பிரசாதம் விற்பனை மூலமாகவும் கோயில் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறது. விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் வெங்கடாசலபதிக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
36
பத்மநாபசுவாமி கோயில்
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயில், நாட்டின் மிகப் பெரிய பணக்காரக் கோயில்களின் ஒன்று. அறிக்கைகளின்படி, கோயிலின் ஆறு ரகசிய அறைகளில் மொத்தம் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான செல்வம் உள்ளது. இதுதவிர, கருவறையில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரம்மாண்டமான விஷ்ணுவின் தங்கச் சிலையும் இருக்கிறது.
மகாராஷ்டிராவின் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு பக்தர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர். இந்த புனித கோயில் ஆண்டுதோறும் சுமார் ரூ.350 கோடி மதிப்பிலான நன்கொடைகளைப் பெறுகிறது.
56
மாதா வைஷ்ணோ தேவி கோயில்
ஜம்முவில் உள்ள திரிகூட மலைகளின் மீது அமைந்துள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயில். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், இந்த கோயில் சுமார் ரூ.500 கோடி நன்கொடை ஈட்டுகிறது.
66
புகழ்பெற்ற சித்திவிநாயக் கோயில்
மும்பையின் புகழ்பெற்ற சித்திவிநாயக் கோயிலுக்கு, சாதாரண மக்கள் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரும் வருகை தருகின்றனர். இந்த பிரம்மாண்டமான கோயில் ஆண்டுதோறும் சுமார் ரூ.125 கோடி நன்கொடைகளையும் காணிக்கைகளையும் பெறுகிறது.