Horoscope: 5 ராசிகளுக்கு நல்ல நேரம் தொடக்கம்.! தொழிலில் கொடிகட்டி பறக்க போகும் 4 ராசிகள்.!

Published : Aug 20, 2026, 05:58 AM IST

கிரகங்களின் சஞ்சாரப்படி, சில ராசிகளுக்கு பணமழை பெய்ய போகிறது. அனைத்து ராசிகளுக்கும் ஆவணி மாதத்தின் 2 வது மாதம் எப்படி இருக்கும்? 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்வோம்.

PREV
17
ஆவணியில் கிடைக்க போகும் அதிர்ஷ்டம்.!

ஆவணி மாதத்தின் 2வது வாரம் 5 ராசிகளுக்கு வரம் கிடைக்க போகிறது. எல்லா துறைகளிலும் சாதிக்கும் நிலை ஏற்படும். சிலருக்கு பணம் வரும். சிலருக்கு தனம் வரும். அதிர்ஷ்ட காற்றை சுவாசிக்க போகும் ராசிகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

27
அலுவலகத்தில் புதிய பொறுப்புகள், உங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு

மேஷம் (Aries) 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடிவரும். சவாலான பணிகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை மேலதிகாரிகள் அங்கீகரிப்பார்கள். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி அமைதி திரும்பும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நண்பர்கள் வழியில் நல்ல செய்தி வரும். ஆரோக்கியத்தில் சிறு கவனக்குறைவும் கூடாது. வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு உயரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.

ரிஷபம் (Taurus) 

புதிய சந்தோஷங்களும் நிம்மதியும் நிறைந்த நாளாக இருக்கும். ஆவணி மாதத்தின் 2வது வாரத்தில் புதிய வாய்ப்புகளும் பண வரவும் அதிகரிக்கும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய முதலீடுகளை தைரியமாகச் செய்யலாம். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தம்பதியரிடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக வாராக்கடன்கள் வசூலாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும்.

37
நல்லது செய்ய காத்திருக்கும் கிரகஹங்கள்.!

மிதுனம் (Gemini) 

ஆவணி மாதத்தின் 2வது வாரம் உங்களுக்கு நல்லது செய்யவுள்ளது. எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது வீண் விவாதங்களைத் தவிர்க்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு சற்று அதிகமாக இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நிதி நிலையை சீராக வைக்கும். பயணங்களின் போது கவனமாக இருப்பது அவசியம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும். பிள்ளைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள். மாலையில் மனதிற்கு இனிய சம்பவங்கள் நடக்கும். இறை வழிபாடு மன அமைதியைத் தரும்.

கடகம் (Cancer) 

ஆவணி மாதம் உங்களின் தன்னம்பிக்கை அதிகரித்து நிம்மதி சந்தோஷத்தை கொடுக்கும். அதிலும் ஆவணி 2வது வாரம் நீண்ட நாளாக தள்ளிப்போன காரியங்கள் விரைந்து முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். எதிர்பார்த்த பணவரவு கைக்கு வந்து சேரும். சொத்து தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் தொழிலுக்கு உதவும்.

47
புதிய தொழில் தொடங்கும் யோகம், பேச்சில் மென்மையைக் கடைப்பிடிக்கவும்

சிம்மம் (Leo)

உங்களுக்கு நற்பலன்கள் கூடும் மாதம் ஆவணி. தொட்டதெல்லாம் துலங்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் திரும்பக் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கணவன்-மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும்.

கன்னி (Virgo) 

காரியங்களில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக இருக்கும். கவனச்சிதறலைத் தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது அவசியம். தேவையற்ற கவலைகளை மனதிலிருந்து தூக்கி எறியுங்கள். தொழில் ரீதியான பயணங்கள் நல்ல பலனைத் தரும். பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு வழிகாட்டும். ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். மாலையில் இனிய செய்தி வந்து சேரும்.

57
வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.! புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.!

துலாம் (Libra) 

ஆவணி 2வது வாரத்தில்அதிர்ஷ்டம் நிறைந்து காணப்படும் . நினைத்த காரியங்களை சுலபமாக முடித்து காட்டுவீர்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். கடன்களை அடைக்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய நல்ல நேரம். குடும்பத்துடன் ஆன்மீகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கூடும்.

விருச்சிகம் (Scorpio) 

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட வேலைகள் கச்சிதமாக முடியும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். சவாலான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த விரிசல்கள் மறையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி சாதகமாகும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

67
வெற்றி மேல் வெற்றி சாத்தியம்.! இனி பொற்காலம்தான் இவர்களுக்கு

தனுசு (Sagittarius) 

மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உச்சத்தைத் தொடுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சுபச்செலவுகள் வரக்கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலனைத் தரும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

மகரம் (Capricorn) 

காரியங்களில் விழிப்புடன் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது மன அமைதியைத் தரும். அலுவலகத்தில் வேலைகளை கவனமாகச் செய்யவும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. தொழிலில் போட்டிகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது நல்ல மாற்றத்தைத் தரும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. மாலையில் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

77
சந்தோஷம் பொங்கும்.! மகிழ்ச்சி பிறக்கும் இவர்களுக்கு.!

கும்பம் (Aquarius) 

எதிர்பார்த்த வெற்றித் தேடி வரும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் சேருவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டு.

மீனம் (Pisces)

எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். பண விஷயத்தில் யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்கவும். மாலையில் பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பொறுமையைக் கடைப்பிடித்தால் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இறை வழிபாடு உங்களுக்கு நன்மையளிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories