Guru Peyarchi 2026 Palangal : குரு பகவான் மார்ச் 11ஆம் தேதி மிதுன ராசியில் நேரடி பயணத்தைத் தொடங்க இருக்கிறார். இதன் காரணமாக பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தில் குரு பகவான் அதிர்ஷ்டம் மற்றும் புனிதத்தின் அடையாளமாக கருதப்படுகிறார். அவர் தனது நிலையை மாற்றும் பொழுது அது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய ஓராண்டு காலம் எடுத்துக் கொள்வார். மீண்டும் அதே ராசிக்கு வர 12 வருடங்கள் ஆகும். இந்த நிலையில் தற்போது அவர் மிதுன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
25
குரு பகவானின் நேரடி பயணம்
வக்ர நிலை என்பது ஒரு கிரகம் பின்னோக்கி நகர்வது போன்ற தோற்றமாகும். இந்த நிலையில் மார்ச் 11ஆம் தேதி புதன்கிழமை குருபகவான் மாலை 6:17 மணிக்கு தனது நேரடி பயணத்தைத் தொடங்க இருக்கிறார். மிதுன ராசியின் அதிபதியாக குரு பகவான் இருப்பதால் அவரது நேரடி பயணம் மிதுனம் உட்பட சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களைத் தர இருக்கிறது. அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
35
மிதுனம்
குரு பகவான் மிதுன ராசியில் தனது நேரடி பயணத்தைத் தொடங்க இருப்பதால் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்க இருக்கிறது. பல வழிகளில் அவர்கள் நன்மைகளைப் பெறுவார்கள். வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சொத்து மற்றும் நிலம் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் நேரடி இயக்கம் பல வழிகளில் நன்மையைத் தரும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெறும். நீண்ட காலமாக இழுபறியில் இருந்த பணிகள் முடிவுக்கு வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். நஷ்டத்தில் இருந்து வந்த தொழில் லாப பாதைக்கு திரும்பும். கூட்டாக தொழில் செய்பவர்கள் வெற்றிகளைப் பெறுவீர்கள். வருமானம் உயரும். தொழில் தொடங்க நினைப்பவர்களின் கனவு நனவாகும்.
55
மீனம்
மீன ராசிக்காரர்கள் குரு பகவானின் ஆசியால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். இதுவரை உங்களை வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டும் சிறக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டி, பொறாமைகள் குறையும். எதிரிகள் விலகுவார்கள். பணியிடத்தில் இருந்த அரசியல் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் கனவு நனவாகும். நிதிநிலை மேம்படும். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)