Guru Peyarchi 2026 Palangal : 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் தனது உச்ச வீடான கடக ராசிக்குள் நுழைய இருக்கிறார். ஜோதிட ரீதியாக இந்த பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வருகிற ஜூன் 2 ஆம் தேதி அன்று குரு பகவான் கடக ராசிக்குள் நுழைய இருக்கிறார். கடக ராசியானது குரு பகவான் உச்சம் பெறும் ராசியாகும். குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுவதால் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது உச்ச வீடான கடக ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார். இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், புதிய வாய்ப்புகளையும், நிதி ஆதாரங்களையும் வழங்க இருக்கிறது.
26
குரு பெயர்ச்சி 2026
ஒரு கிரகம் தனது உச்ச வீட்டில் நுழையும் பொழுது அதன் சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. உச்ச வீட்டில் இருக்கும் போது ஒரு கிரகம் சுப பலன்களை வாரி வழங்குகிறது. 2026 ஜூன் 2 செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:25 மணிக்கு குரு பகவான் மிதுன ராசியிலிருந்து விலகி, கடக ராசிக்குள் நுழையப் போகிறார். குரு பகவான் கடக ராசியில் தனது முழு பலத்தையும் வெளிப்படுத்துகிறார். இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
36
மேஷம்
குரு பகவானின் கடக ராசி பெயர்ச்சி மேஷ ராசியின் பத்தாம் இடான தொழில் ஸ்தானத்தில் நிகழ்கிறது. அதன் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வேலையை இழந்தவர்கள் நல்ல இடத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலைமை கணிசமாக மேம்படும். தைரியம், வீரம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான கதவுகள் திறக்கப்படும். பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிறைய லாபத்தை எதிர்பார்க்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும்.
குரு பகவானின் பெயர்ச்சி மிதுன ராசியின் 12 ஆம் வீட்டில் நிகழ இருக்கிறது. மேலும் குரு உங்கள் ராசியை பார்ப்பதால் மிதுன ராசிக்காரர்கள் நிதி ரீதியான நன்மைகளைக் பெறுவீர்கள். உங்களுக்கு வந்து சேர வேண்டிய பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கலாம். தொழிலில் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். தொழிலில் புதிய திட்டங்கள் மற்றும் வியூகங்களை செயல்படுத்தி வெற்றிகளைக் குவிப்பீர்கள். முதலீட்டு முடிவுகள் நல்ல லாபத்தை தரும். நிதி நிலைமை சீராகும். பழைய பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
56
கடகம்
கடக ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால் அதிகபட்ச நன்மைகளைப் பெற உள்ளனர். லக்ன ஸ்தானத்தில் அமரும் குரு பகவான் உங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் மாற்ற இருக்கிறார். தொழிலில் முன்னேற்றம், தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி, கல்வியில் முன்னேற்றம், ஆன்மீகத்தில் ஈடுபாடு என அனைத்தும் நல்லதாகவே நடக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் தேடி வரும். தொழில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் பொருளாதார நிலையை வலுப்படுத்தும்.
66
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சிறப்பான நன்மைகளை தரக்கூடும். குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து விலகி பாக்கிய ஸ்தானத்தில் பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக நீங்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த பணிகள் முடிவடையும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வி, போட்டித் தேர்வுகள், புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலைமை சீராகும். பழைய கடன்களில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கைவந்து சேரும். உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)