நவக்கிரகங்களின் தலைவனாக கருதப்படும் குரு பகவான், மங்களகரமான நிகழ்வுகள் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குக் காரகராக விளங்குகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, குரு பகவான் ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் சஞ்சரிப்பார். இதனால் அனைத்து ராசிகளிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும்.
தற்போது கடக ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், வரும் அக்டோபர் 31 அன்று சிம்ம ராசிக்குள் பிரவேசிக்க உள்ளார். ஏற்கனவே சிம்ம ராசியில் நிழல் கிரகமான கேது சஞ்சரித்து வரும் நிலையில், அங்கு குரு-கேது சேர்க்கை நிகழவுள்ளது.
திடீர் மாற்றங்களுக்கும் ஆன்மீக ரகசியங்களுக்கும் காரணமான கேதுவுடன், சுபகிரகமான குரு இணைவது பல ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் ஒரு முக்கிய வானியல் நிகழ்வாகும். இந்த விசேஷ சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகிறது என்பதை பார்ப்போம்.