ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்கள் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுவது போல, அவ்வப்போது அஸ்தமனம் மற்றும் உதய நிலைகளையும் அடைவார்கள். இந்த கிரக நிலைகளின் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியே தீரும். அந்த வகையில் நவகிரகங்களில் ‘சுப கிரகம்’ என்றும், தேவர்களின் குரு என்றும் போற்றப்படும் குரு பகவான், தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார்.
இந்நிலையில், வரும் ஜூலை 14 ஆம் தேதி குரு பகவான் அஸ்தமனமாகி, ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை இதே நிலையில் நீடிக்கவுள்ளார். குரு பகவான் சூரியனுக்கு மிக அருகில் வரும்போது தனது பலத்தை இழந்து அஸ்தமன நிலையை அடைவார். இந்த குரு அஸ்தமன காலம் சில ராசிகளுக்கு சவாலாக இருந்தாலும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக மாபெரும் வளர்ச்சியையும் தரப்போகிறது. அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் யார் என்று பார்ப்போம்.