வாரத்தின் முதல் நாளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. உலகளாவிய சந்தை நிச்சயமற்ற தன்மையால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதால் விலை உயர்ந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்துள்ளது. உலகளவில் பங்கு சந்தை தளர்வாக இருக்க, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான வழியாக தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக தங்கத்தின் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளது. இதனால் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்க நினைக்கும் பொதுமக்கள் தங்கள் திட்டங்களை தள்ளிப் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
23
இன்றைய விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து ரூ.11525க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 200 ரூபாய் அதிகரித்து 11525 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் உலோகத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராம் 195 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட 5 ரூபாய் அதிகமாகும். ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
33
அடித்தட்டு மக்கள் இந்நிலையில் என்ன செய்யலாம்?
தங்கம் வாங்கும் எண்ணத்தை தற்காலிகமாக நிறுத்தி, தங்க சேமிப்பு திட்டங்கள் அல்லது டிஜிட்டல் தங்கம் போன்ற மாற்று வழிகளை பரிசீலிக்கலாம். அரசு நாணயத் தங்க பத்திரங்கள் (Sovereign Gold Bonds) போன்ற பாதுகாப்பான வழிகள் மூலம் தங்கத்தில் மறைமுகமாக முதலீடு செய்யலாம். விலை குறையும் நேரத்தைக் காத்திருந்து, சிறு அளவில் தங்கம் சேமிக்க தொடங்குவது நல்லது. இப்போதைய உயர்வை பார்த்து பதற்றமடையாமல், நிதி ஒழுங்கை கைக்கொள்வது தான் அறிவார்ந்த நடைமுறை என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.