ஜூன் முதல் இந்த 5 ராசிகளுக்கு கஜலட்சுமி ராஜயோகம்.! செல்வம் பெருகும்.! வருமானம் இரட்டிப்பாகும்.! அரசு வேலை தேடி வரும்.!

Published : Apr 23, 2026, 11:26 AM IST

Gajalakshmi Rajyog Lucky Zodiac Signs : ஜூன் மாத தொடக்கத்தில் குருவும் சுக்கிரனும் இணைவதால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகி, வாழ்க்கை பிரகாசமாகும். 

PREV
17
Gajalakahmi Rajyog Lucky Zodiac Signs

ஜோதிடப்படி, குரு பகவானை தேவர்களின் குருன்னு சொல்வாங்க. இப்போ மிதுன ராசியில இருக்கிற குரு, ஜூன் 2-ம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகுறார். அதேபோல, சுக்கிரனும் ஜூன் 9-ம் தேதி கடக ராசிக்கு வர்றார். இந்த இரண்டு கிரகங்களும் ஒண்ணா சேர்றதால கஜலட்சுமி யோகம் உருவாகுது. ஜூலை 5 வரைக்கும் இந்த கிரகங்கள் கடக ராசியிலயே இருக்கும். இதனால சில ராசிக்காரங்களுக்கு செல்வம் பெருகி, வாழ்க்கையில வெற்றி கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். அது எந்தெந்த ராசிகள்னு பார்க்கலாம் வாங்க.!

27
ரிஷபம்

ரிஷப ராசிக்காரங்களுக்கு இந்த கஜலெட்சுமி ராஜயோகம் ஒரு வரப்பிரசாதம்னே சொல்லலாம். முன்னாடி செஞ்ச முதலீடுகள் இப்போ நல்ல லாபத்தைக் கொடுக்கும். நீங்க வேலை பார்க்கிறவரா இருந்தா, உங்க கூட வேலை பார்க்கிறவங்களும், மேலதிகாரிகளும் உங்களைப் பாராட்டுவாங்க. குருவோட அருளால, உங்களுக்கு சம்பள உயர்வோ அல்லது பதவி உயர்வோ கிடைக்க வாய்ப்பு இருக்கு. முடிக்காம இருந்த வேலைகள் எல்லாம் சீக்கிரமே முடிஞ்சிடும். 

அதேபோல, சுக்கிரனோட பார்வையால, ரொம்ப நாளா உங்களை வாட்டி வதைச்ச குடும்பப் பிரச்சினைகள் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் இந்த நேரத்துல சரியாகும். வேலை விஷயத்துல குடும்பத்தினர் உங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பாங்க. இதனால உங்க தனிப்பட்ட வாழ்க்கையில சந்தோஷமும் அமைதியும் நிலவும். வியாபாரம் செய்றவங்களுக்கு இந்த கஜலட்சுமி யோகம் நல்ல லாபகரமான வாய்ப்புகளைக் கொடுக்கும்.

37
மிதுனம்

மிதுன ராசிக்காரங்களுக்கு கஜலட்சுமி ராஜயோகம் ரொம்பவே சாதகமா இருக்கப்போகுது. கஜலட்சுமி யோகம் உங்களுக்கு பெரிய வளர்ச்சியைக் கொடுக்கும். ஜூன் 9-ம் தேதி குரு-சுக்கிரன் சேர்க்கை உங்க வாழ்க்கையில அதிர்ஷ்ட கதவுகளைத் திறக்கும். இந்த யோகத்தால உங்க வாழ்க்கையில அமைதியும் சந்தோஷமும் அதிகமாகும். மனசுல இருந்த குழப்பங்கள் எல்லாம் இப்போ தீர்ந்துடும். வேலை பார்க்கிறவங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.

47
சிம்மம்

சிம்ம ராசிக்காரங்க வாழ்க்கையை கஜலட்சுமி யோகம் ஜொலிக்க வைக்கப் போகுது. வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா மாறும். நீங்க சொல்றதை எல்லாரும் கேட்க ஆரம்பிப்பாங்க. வேலை பார்க்கிறவங்களுக்கு புரொமோஷன் கிடைக்க வாய்ப்பு இருக்கு. பண வரவு அதிகமாகும். தொட்டதெல்லாம் ஜெயம்தான். இதுக்கு முன்னாடி இருந்த சவால்கள், தடைகள் எல்லாம் விலகிடும். சிம்ம ராசிக்காரங்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

57
கன்னி

கன்னி ராசியோட 11-வது வீட்டுல குரு-சுக்கிரன் சேர்க்கை கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குது. இது உங்க அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். நீங்க நீண்ட தூரப் பயணங்கள் போவீங்க. இந்தப் பயணங்கள் நல்ல பண லாபத்தைக் கொண்டு வரும். வேலையில அதிர்ஷ்டம் கை கொடுக்கிறதால, உங்க இலக்குகளை ஈஸியா அடைவீங்க. சிலருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பிருக்கு. வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபத்தைத் தரக்கூடிய புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையா இருக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். பல வழிகள்ல பணம் வரலாம். வருமானத்துல நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு உயர்வு இருக்கும்.

67
தனுசு

தனுசு ராசிக்கு ஒரு நல்ல இடத்துல கஜலட்சுமி ராஜயோகம் உருவாகுது. இதனால, வெளிநாடு போறதுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகத்துல ஆர்வம் அதிகமாகும். புண்ணிய யாத்திரைகள் போவீங்க. வேலை தேடுறவங்களுக்கு நல்ல சம்பளத்துல வேலை கிடைக்கும். வீட்டுல சந்தோஷமும், சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். சுக்கிரனோட அருளால, உடல்நலப் பிரச்சினைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். 

மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல நேரம். போட்டித் தேர்வுகள்ல நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு மார்க் வாங்குவீங்க. புது வீடு, வண்டி வாங்கவும் வாய்ப்புகள் இருக்கு. வேலை பார்க்கிறவங்களுக்கு இந்த நேரம் ரொம்ப சாதகமா இருக்கும். வேலையில வெற்றி, புகழ், கௌரவம் எல்லாம் கூடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில இருக்கிறவங்களுக்கு இரட்டிப்பு லாபம் நிச்சயம்.

77
பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories