12 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் கஜகேசரி யோகம்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும்?

First Published | Dec 16, 2024, 2:34 PM IST

Gajakesari Yoga Palan Tamil : 12 வருடங்களுக்குப் பிறகு, குரு மிதுன ராசியில் சஞ்சரிப்பதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. 2025ல் கஜகேசரி யோகத்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?

Gajakesari Yoga Palan Tamil

கஜகேசரி யோகம்

Gajakesari Yoga Palan Tamil : குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு மிதுன ராசியில் சஞ்சரிப்பதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. இது மிதுனம் ராசி உள்ளிட்ட 5 ராசிகளுக்கு 2025ல் கஜகேசரி யோகத்தால் கிடைக்கும் பலன்கள் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்..

Mithuna Rasi Gajakesari Yoga Palan Tamil

மிதுன ராசி

மே 28 அன்று மிதுன ராசியில் குருவும் சந்திரனும் இணைவதால், மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்கிறது. ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். அறிவாற்றலும் செயல்திறனும் மேம்படும். நிதிப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்; பணவரவு உண்டு. தொழில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். 

Tap to resize

Kanni Rasi Gajakesari Yoga Palan Tamil

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் கஜகேசரி யோகத்தால் மன அமைதி கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்ல அல்லது வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புவோருக்கு முயற்சிகள் வெற்றி தரும். வாகன யோகமும் உண்டு.

Thulam Rasi Gajakesari Yoga Palan Tamil

துலாம் ராசி

துலாம் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் குருவும் சந்திரனும் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மூ சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு அல்லது மனை வாங்கும் கனவு நனவாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மூ தொழில் செய்வோருக்கு கஜகேசரி யோகம் 2025ல் பெரிய லாபத்தைத் தரும்.

Dhanusu Rasi Gajakesari Yoga Palan Tamil

தனுசு ராசி

தனுசு ராசிக்கு ஏழாம் இடத்தில் குருவும் சந்திரனும் இணைவதால் 2025ல் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். குறிப்பாக தந்தையால் நன்மைகள் உண்டு. மருமகனாலும் நன்மைகள் உண்டு. 

Kumba Rasi Gajakesari Yoga Palan Tamil

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு 2025ல் மிதுன ராசியில் குரு சஞ்சரிப்பதாலும் கஜகேசரி யோகம் உருவாவதாலும் நன்மைகள் உண்டு. சனி தசையின் கடைசி கட்டத்தில் இருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு உண்டு. கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

Latest Videos

click me!