Gajakesari Yoga 2026: நேரடியாக விழும் குரு பார்வை.! கஜகேசரி ராஜயோகத்தால் 4 ராசிகளுக்கு இனி ஏறுமுகம் தான்.!

Published : May 18, 2026, 09:00 AM IST

Gajakesari Yoga 2026: ஜோதிடத்தில் ‘கஜகேசரி யோகம்’ ஒரு சக்திவாய்ந்த ராஜயோகமாக கருதப்படுகிறது. இந்த யோகம் ஒருவருக்கு மரியாதை, செல்வம், புத்திசாலித்தனம் மற்றும் தொழில் வெற்றியைத் தரும் என நம்பப்படுகிறது.

PREV
16
Gajakesari Rajyog 2026

மே 18, 2026 அன்று சந்திரன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மிதுன ராசியில் ஏற்கெனவே தேவகுருவான வியாழன் இருக்கிறார். குருவும் சந்திரனும் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகும். இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும், 4 ராசிக்காரர்களுக்கு இது சுப பலன்களை அள்ளித் தரும். அந்த 4 ராசிகள் எவை எனப் பார்ப்போம்.

26
மிதுனம்

கஜகேசரி யோகம் மிதுன ராசியில்தான் உருவாகிறது. அதனால், இந்த ராசிக்காரர்களுக்குத்தான் அதிகபட்ச நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வரலாம். நீண்ட நாட்களாகத் தேங்கிக்கிடந்த வேலைகள் இனி வேகமாக முடியும். உங்கள் நிதிநிலை மேம்படும். புதிய வருமான வழிகளும் உருவாகும். வியாபாரிகளுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

36
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் தொழில் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்தும். முக்கிய தேவைகள் நிறைவேறும். ஆன்ம பலம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலைகள் பாராட்டுகளைப் பெறும். மேலதிகாரிகள் உங்கள் பணியால் மகிழ்ச்சியடைவார்கள். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமையும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. திருமண முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

46
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொண்டு வரப்போகிறது. பொருளதாராத்தில் தன்னிறைவு உண்டாகும். புத்திர பிராப்தம் சித்தமாகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் இப்போது வெற்றிகரமாக முடியும். வேலையில் வெற்றியும், மரியாதையும் கிடைக்கும். மாணவர்களுக்கும் இது ஒரு நல்ல நேரம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். உங்கள் நிதி நிலைமை வலுப்பெறும்.

56
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் லாபத்திற்கும், முன்னேற்றத்திற்கும் புதிய கதவுகளைத் திறக்கும். மறைந்து கிடந்த திறமைகள் வெளிவரும். வேலையில் புதிய பொறுப்பு அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் பார்க்கலாம். இந்தக் காலகட்டத்தில் திடீர் பண வரவுக்கும் யோகம் இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். பழைய சண்டைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியமும் முன்பை விட சிறப்பாக இருக்கும். பணப்பற்றாக்குறை அகலும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.

66
பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories