வெளிநாடு செல்லும் யோகம் உடைய அதிர்ஷ்டக்கார ராசிகள் யார் தெரியுமா?

Published : Aug 21, 2026, 01:44 PM IST

வெளிநாடு செல்லும் யோகம் மற்றும் அங்கு வேலை பார்க்கும் அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும்? ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பால் வெளிநாட்டு வாய்ப்பைப் பெறும் ராசிகள் எவை என்பதை விரிவாகத் தெரிந்துகொள்ள இந்த ஜோதிடத் தொகுப்பைப் படியுங்கள்!

PREV
16
வெளிநாட்டு யோகம் அதிகம் கொண்ட ராசிகள் :

வேலை வாய்ப்பு, உயர் கல்வி அல்லது தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்று குடியேறுவது என்பது இன்றைக்கு பலருடைய கனவாக உள்ளது. இத எதுவும் முடியவில்லை என்றால் கூட குறைந்தபட்சம் சுற்றுலா பயணியாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் ஜாதகத்தில் 9-ஆம் மற்றும் 12-ஆம் வீடுகள் தூரதேசப் பயணங்களையும், வெளிநாட்டு வாழ்வையும் தீர்மானிக்கும் முதன்மை வீடுகளாகக் கருதப்படுகின்றன. அத்துடன், சர ராசிகளுக்கும் (சலனத் தன்மை கொண்ட ராசிகள்) ராகு-கேது, குரு போன்ற கிரகங்களின் அமைப்பிற்கும் இதில் முக்கிய பங்குண்டு. ஜோதிட ரீதியாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு மற்றும் யோகம் அதிகம் கொண்ட ராசிகள் பற்றியும், அதற்கான கிரக அமைப்புகள் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.

26
மேஷம் :

மேஷம் ஒரு சர ராசி என்பதால், புதிய இடங்களை நோக்கிய தேடலும், பயணங்களும் இவர்களுக்கு இயல்பாகவே அமையும். குறிப்பாக, உங்கள் ஜாதகத்தில் ராகுவின் தசை அல்லது புக்தி நடக்கும் காலத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை சார்ந்த வெளிநாட்டு வாய்ப்புகள் மிக எளிதாகக் கதவைத் தட்டும்.

36
மிதுனம் :

வாயு ராசியான மிதுனத்தின் அதிபதி புதன் ஆவார். உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் சர்வதேச வணிகத் தொடர்புகள் மூலம் வெளிநாடு செல்லும் யோகம் இவர்களுக்கு அதிகம். குறிப்பாக, 9-ஆம் வீட்டில் குரு அல்லது சுக்கிரன் சுபத்துவமாக அமைந்திருந்தால், சிறு வயதிலேயே வெளிநாட்டுப் பயணம் சாத்தியமாகும்.

46
கடகம் :

நீர் ராசியான கடகத்திற்கு, கடல் கடந்த பயணங்கள் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருக்கும். 12-ஆம் வீடு வலுவாக இருக்கும் பட்சத்தில், வேலை நிமித்தமாக வெளிநாடு சென்று அங்கேயே நிரந்தரமாகக் குடியேறும் (PR) யோகம் இவர்களுக்கு இயல்பாகவே அமையும்.

56
தனுசு :

ஜோதிடத்தின் 9-ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான குருவின் ராசி இது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பது, ஆன்மீகச் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிப்பது போன்றவற்றில் தனுசு ராசிக்காரர்கள் அதிக யோகம் பெற்றவர்கள்.

66
மீனம் :

காலபுருஷ தத்துவத்தின் 12-ஆம் ராசியான மீனம், எல்லையற்ற நீர் ராசியாகும். உங்கள் ஜாதகத்தில் 9-ஆம் அதிபதியும், 12-ஆம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ அல்லது ராகுவுடன் தொடர்பு கொண்டிருந்தாலோ, தூரதேசங்களில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைப் பெறும் யோகம் உண்டாகும்.

வெளிநாட்டு யோகத்தை தூண்டும் எளிய பரிகாரம்: தூரதேசப் பயணங்களில் தடைகள் இருப்பின், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதும், துர்க்கை அம்மனுக்கு நெய் தீபமேற்றி ராகு காலத்தில் வழிபடுவதும் வெளிநாட்டு யோகத்தை விரைவுபடுத்தும்.

Read more Photos on
click me!

Recommended Stories