கும்ப ராசிக்கு பிப்ரவரி மாதம் முழுவதும் சிறப்பாக இருக்கும். கும்ப ராசியின் முதல் வீட்டில் கிரகங்களின் சேர்க்கை நடைபெறுவதால் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்கள் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும். உங்கள் பேச்சாற்றல் மற்றும் புத்தி கூர்மையால் பலரை ஈர்ப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கி, நல்ல வரன் அமையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை நிகழும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. முதலீடுகள் லாபம் தரும். மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)