This Week Rasi Palan: தன ஸ்தானத்தில் குரு பார்வை.! இந்த வாரம் கூரையை பிச்சிட்டு பணம் கொட்டப்போகுது.!

Published : Feb 10, 2026, 04:19 PM IST

This Week Rasi Palan Viruchigam: பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
கிரக நிலைகள்:

விருச்சிக ராசி நேயர்களே, ஜனாதிபதி குரு பகவான் தன ஸ்தானத்தை பார்ப்பதால் இந்த வாரம் பொருளாதார நெருக்கடிகள் குறையும். புதிய அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். வாழ்க்கைத் தரம், பொருளாதார நிலை உயரும். விலையுயர்ந்த பொருட்களின் சேர்க்கை நடைபெறும்.

பொதுவான பலன்கள்:

இந்த வாரம் எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். தன்னம்பிக்கை உயர்ந்து காணப்படும். வாழ்க்கையை வெறுத்தவர்களுக்கு கூட நம்பிக்கை அதிகம் அதிகரிக்கும் விதமான மாற்றங்கள் நிகழும். சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இந்த வாரம் வேகம் எடுக்கும்.

நிதி நிலைமை:

தன காரகன் குருவின் பார்வை இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும். திடீர் மருத்துவச் செலவுகள் அல்லது வீட்டை பராமரிக்கும் செலவுகள் வரக்கூடும். எனவே திட்டமிட்டு செலவழிப்பது நல்லது. பங்குச்சந்தை மூலம் மிதமான லாபம் கிடைக்கும்.

வேலை மற்றும் தொழில்:

நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானம் தேவை. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாண்டு லாபத்தை அதிகரிப்பீர்கள்.

குடும்ப உறவுகள்:

இந்த வாரம் குடும்ப உறவுகளிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மன நிம்மதி ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கை கூடி வரும். சித்தப்பா வழியிலிருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து, மரியாதை உயரும். காணாமல் போன நகை, பணம் திரும்ப கிடைக்கும். பிறரை அண்டி பிழைத்த நிலை மாறும்.

ஆரோக்கியம்:

உடல் நிலையில் சற்று சோர்வு ஏற்படலாம். சீரான உறக்கம் அவசியம். ரத்த அழுத்தம் அல்லது உஷ்ணம் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரக்கூடும் என்பதால் அதிக தண்ணீர் குடிக்கவும். வெளி உணவுகளை தவிர்த்து வீட்டில் செய்யப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை உண்பது நல்லது.

கல்வி:

மாணவர்கள் இந்த வாரம் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். ஞாபக மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளதால், எழுதிப் பழகும் முறையை பின்பற்றுவது சிறந்தது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

சந்திராஷ்டம நாட்கள்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்திராஷ்டம நாட்கள் எதுவுமில்லை. இருப்பினும் எந்த முயற்சியையும் மேற்கொள்வதற்கு முன்னரும் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

பரிகாரங்கள்:

சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள தில்லை நடராஜரை வணங்குவது நன்மைகளைத் தரும். செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபடலாம். சனிக்கிழமைகளில் அனுமன் ஆலயங்களில் நெய் தீபம் வெற்றி வழிபடவும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்பு.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories