This Week Rasi Palan: துலாம் ராசிக்கு டபுள் ஜாக்பாட்.! இந்த வாரம் முதல் பொற்காலம் தொடங்கும்.!

Published : Feb 10, 2026, 02:58 PM IST

This Week Rasi Palan Thulam: பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
கிரக நிலைகள்:

துலாம் ராசி நேயர்களே, ராசியின் அதிபதியான சுக்கிர பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு மற்றும் புதனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக இந்த வாரம் புதிய வாய்ப்புகள் கைகூடும். வாழ்க்கையில் வளமும், பலமும் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் தெரிய மாற்றங்கள் உண்டாகும்.

பொதுவான பலன்கள்:

கிரகங்களின் சாதகமான நிலை காரணமாக இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். சமுதாயத்தில் உங்களுக்கென தனி இடத்தைப் பிடிப்பீர்கள். உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். பங்குச்சந்தை, கமிஷன், ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும்.

நிதி நிலைமை:

இந்த வாரம் பணப்புழக்கம் சீராக இருக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணம் வரலாம். சொத்து சேர்க்கை நடைபெறும். வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தங்கம், வெள்ளி போன்ற திட்டங்களில் முதலீடுகளைத் தொடங்குவீர்கள்.

வேலை மற்றும் தொழில்:

பணிச்சுமைகள் குறைந்து இந்த வாரம் மனம் நிம்மதியுடன் காணப்படுவீர்கள். தொழிலில் நிலவிய மந்த நிலை மற்றும் தேக்கங்கள் விலகி லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். அலுவலகத்தில் வேலை செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் அல்லது தொழில் மாற்றம் உண்டாகக்கூடும்.

குடும்ப உறவுகள்:

குடும்பத்தில் இந்த வாரம் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். குழந்தை இல்லாமல் இருந்து வரும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு மகிழ்ச்சி தரும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் தடையின்றி நடக்கும்.

ஆரோக்கியம்:

இந்த வாரம் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. இருப்பினும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிக வேலைப்பளு காரணமாக சிறு சோர்வு ஏற்படலாம். தியானம் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

கல்வி:

மாணவர்களுக்கு இந்த வாரம் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கடினமான பாடங்களையும் எளிதாக புரிந்து கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு சாதகமான முடிவுகள் அல்லது நல்ல செய்திகள் கிடைக்க கூடும்.

சந்திராஷ்டம நாட்கள்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் சந்திராஷ்டம நாட்கள் கிடையாது. எனவே எந்த ஒரு முடிவுகளையும் தைரியமாகவும், துணிச்சலுடனும் எடுக்கலாம். இருப்பினும் முக்கிய முடிவுகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

பரிகாரங்கள்:

ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட கடன்கள் தீர்ந்து பண வரவு உண்டாகும். சனிக்கிழமைகளில் ஏழை எளியவர்களுக்கு தயிர் சாதம் தானமாக வழங்கவும். மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories