
ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர் ராசியை மாற்றுகிறார். அவர் ஒரு ராசிக்கு வரும் பொழுது அந்த ராசிக்கு முந்தைய ராசி மற்றும் அதற்கு அடுத்த ராசி ஆகியவற்றிலும் தாக்கம் ஏற்படும். இது விரய சனி, ஜென்ம சனி, பாத சனி என்று வகைப்படுத்தப்படுகிறது. தற்போது மீன ராசியில் பயணித்து வரும் சனி பகவான் ஜூன் 3, 2027 ஆம் ஆண்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக ரிஷப ராசிக்கு ஏழரை சனியின் முதல் பகுதியான விரய சனி தொடங்க இருக்கிறது.
இதையும் படியுங்கள்: Venus Transit 2026: ஜூலையில் இந்த 4 ராசிகளுக்கு சுக்கிர திசை ஆரம்பம்.! ராஜயோகம், வெற்றி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.!
மீன ராசிக்கு பாத சனியும், மேஷ ராசிக்கு ஜென்ம சனியும், ரிஷப ராசிக்கு விரய சனியும் நடக்க இருக்கிறது. இந்த காலத்தில் ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு சனியின் தாக்கம் எவ்வாறு இருக்கப் போகிறது, பரிகாரங்கள் என்ன என்பது பற்றி இங்கு காணலாம். ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் யோககாரகன் ஆவார். பாக்கியம் மற்றும் தொழிற்ஸ்தான வீடுகளான ஒன்பது மற்றும் பத்தாம் வீடுகளின் அதிபதியாகவும் விளங்குகிறார். ஜோதிட விதிகளின்படி ஒரு ராசிக்கு ஏழரை சனி என்பது சனி பகவான் அந்த ராசிக்கு முந்தைய வீடு (12ஆம் வீடு), ராசி (1ஆம் வீடு), அடுத்த வீடு (2ஆம் வீடு) ஆகியவற்றில் சஞ்சரிக்கும் காலத்தைக் குறிக்கும்.
இதையும் படியுங்கள்: Tamil Astrology: 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சூரியனின் அபூர்வ சேர்க்கை.! ஜூலையில் இந்த 4 ராசிகளுக்கு ஏறுமுகம் தான்.!
ஜோதிடத்தின்படி ரிஷப ராசிக்கு ஏழரை சனி ஜூன் 3, 2027 அன்று தொடங்குகிறது. ஆனால் சனி பகவான் அக்டோபர் 20, 2027 வக்ர நிலையில் பின்னோக்கி நகர்ந்து மீன ராசிக்குள் நுழைவார். மீண்டும் பிப்ரவரி 23, 2028 அன்று மேஷ ராசிக்கு வருவார். அப்போதுதான் ரிஷப ராசிக்கு ஏழரை சனியின் முழுமையாகத் தொடங்கும் ஜூன் 3, 2027 அவர் மேஷ ராசிக்கு வந்தாலும் பிப்ரவரி 23, 2028 முதலே அவரின் முழுமையான பலன்கள் ரிஷப ராசிக்கு தெரிய வரும். இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் தற்காலிகமாக நீங்கும்.
இதையும் படியுங்கள்: Numerology: உங்களுக்கு அடுத்த பிறவி இருக்குமா? இல்லை இதுவே கடைசி பிறவியா? பிறந்த தேதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!
ரிஷப ராசிக்கு ஏழரை சனியின் காலகட்டம் மூன்று கட்டங்களாக நடக்க இருக்கிறது. முதல் காலகட்டம் விரய சனி. மேஷ ராசியில் சனி பகவான் இருக்கும் பொழுது விரய சனி தொடங்குகிறது. இந்த முதல் இரண்டரை ஆண்டுகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேறுவது கடினமாக இருக்கும். தேவையற்ற விரயங்கள் ஏற்படலாம். வீடு கட்டுதல், சுப நிகழ்ச்சிகள் போன்ற சுப விரயங்களும் அதிகரிக்கும். தூக்கமின்மை, வீண் அலைச்சல், மனதில் ஒருவித இனம் புரியாத பதற்றம் ஏற்படலாம். புதிய தொழில் முதலீடுகள் மற்றும் பெரிய அளவிலான கடன் கொடுப்பதை இந்த காலகட்டத்தில் தவிர்க்க வேண்டும்.
சனி பகவான் உங்கள் சொந்த ராசியான ரிஷபத்திலேயே சஞ்சரிக்கும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஜென்ம சனி தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் சோர்வு, அஜீரணக் கோளாறுகள், சோம்பல் அதிகரிக்கலாம். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்காமல் போகலாம். உயர் அதிகாரிகளுடன் பேசும்பொழுது நிதானம் தேவை. உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் உருவாகும். கடுமையான உழைப்பும், நேர்மையும் மட்டுமே உங்களைக் காப்பாற்றும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான மிதுனத்தில் சஞ்சரிக்கும் இறுதிக்கட்டம் கடைசி இரண்டரை ஆண்டுகள் பாத சனி நடக்கிறது. இதன் காரணமாக குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரலாம். வார்த்தைகளில் நிதானம் அவசியம். கோபப்பட்டு பேசும் வார்த்தைகள் உறவுகளை பாதிக்கலாம். பணப்புழக்கம் ஓரளவு சீராக இருக்கும் என்றாலும் சேமிப்பும் குறைய வாய்ப்பு உண்டு. ஏழரை சனியின் இறுதி கட்டம் என்பதால் இந்த இரண்டு ஆண்டுகள் சனி பகவான் உங்களை பக்குவப்படுத்தி சோதனைகளில் இருந்து விடுதலை கொடுத்து, புதிய விடியலை தரத் தொடங்குவார்.
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான். சுக்கிரனும் சனியும் ஜோதிடத்தில் நட்பு கிரகங்கள். மேலும் ரிஷபத்திற்கு சனி பகவான் தர்ம கர்மாதிபதி என்பதால் அவர் மற்ற ராசிகளுக்கு கொடுப்பது போல கடுமையான தீமைகளை அள்ளிக் கொடுக்க மாட்டார். இந்த காலகட்டம் உங்களை வாழ்க்கையில் பக்குவப்பட்ட மனிதராக மாற்றும். கடினமாக உழைப்பவர்களுக்கு சனி பகவான் அதற்கான பலன்களை அள்ளிக் கொடுப்பார். குறுக்கு வழிகளைத் தவிர்த்து, நேர்மையாக இருப்பவர்கள் ஏழரை சனியின் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு நல்ல பலன்களைப் பெற முடியும்.
சனி பகவானின் அருளைப் பெறுவதற்கு சில எளிய பரிகாரங்களை செய்யலாம். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும் சாற்றி வழிபட்டு வர அமைதி கிடைக்கும். ஏழை எளியவர்கள், முன்களப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு உணவு அல்லது உடை வழங்கி உதவுங்கள். தினமும் காலையில் காக்கைக்கு எள் கலந்த சாதம் வைப்பது சனியின் வீரியத்தைக் குறைக்கும். சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்த்து விரதம் இருந்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.