உடம்பை பாடாய் படுத்தும் அக்னி தோஷம்: வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய பரிகாரம் இதுதான்!

First Published | Aug 14, 2023, 3:29 PM IST

பஞ்ச பூதங்களால் ஏற்படும் தோஷங்களில் ஒன்றான அக்னி தோஷம் எதனால் ஏற்படுகிறது, அதன் பாதிப்புகள் என்னென்ன, அக்னி தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் எளிமையாகச் செய்யக்கூடிய பரிகாரம் என்ன என்பதை இத்தொகுப்பில் அறியலாம்.

அக்னி தோஷம் என்றால் என்ன?

அக்னியால் ஏற்படக் கூடிய அக்னி தோஷம் பஞ்ச பூதங்களில் முக்கியமானதான அக்னியால் ஏற்படுவது ஆகும். வெயில் அதிகமாக இருக்கிறது என்று நொந்துகொண்டால் கூட அக்னிதோஷம் ஏற்படும்.

இந்த தோஷம் வந்தால் வீட்டில் குடிகொண்டிருந்த நல்ல சக்திகள் காணாமல் போய், முகப்பொலிவும் மங்கிப்போகும். இதற்கு ஒரு எளிய பரிகாரமாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இருந்துஆரம்பித்து துளசிச் செடிக்கு நீர் ஊற்றி வந்தால் அக்னி தோஷம் தீரும் என்று நம்பப்படுகிறது.

பஞ்சபூதங்களால் ஏற்படும் தோஷங்களில் ஒன்றுதான் அக்னி தோஷம். இதோ வகையில் ஜலதோஷம் என்பதும் பஞ்சபூதங்களில் ஒன்றான நீரினால் ஏற்படும் தோஷம் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறதாம். அந்த ஜலதோஷத்தில் இருந்துகூட சீக்கிரம் விடுபட முடியும். ஆனால், அக்னி தோஷம் பீடித்த நபர் அதிலிருந்து தப்புவதற்குள் மனிதரை பாடாய் படுத்திவிடும்.

அக்னி தோஷம் ஏற்படுவது ஏன்?

அக்னி தோஷம் கண்டால் அந்த நபருக்கு விதவிதமான வியாதிகள் வரும். அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும். காய்ச்சல், வயிற்று வலி போன்ற உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள் உண்டாகும். அக்னி தேவனை அவமரியாதையை செய்தால் இந்த தோஷம் கவிய வாய்ப்பு உள்ளது.

தப்பித் தவறி கூட நெருப்பை உதாசீனம் செய்து பேசிவிடக்கூடாது. அக்னியை பழித்தாலோ, புறக்கணித்தாலோ அக்னி தோஷத்துக்கு ஆளாக நேரிடும். பற்றி எரியும் நெருப்பைக் கண்டு அஞ்சினாலும் அக்னி தோஷம் வரலாம். சுடுகாட்டில் எரிந்துகொண்டிருக்கும் பிணத்தைப் பார்த்து பீதி அடைந்தாலும் அக்னிதோஷம் பிடித்துக்கொள்ளும்.

அக்னி தோஷம் உள்ளவர்கள் கொழுந்து விட்டு எரியும் தீயைப் பார்த்து பயந்தவராக இருந்தால், சிவபெருமான நினைத்து அமைதியாக தியானம் செய்ய வேண்டும். அஞ்சி நடுங்கிய பெரிய தீயை அழகான தீச்சுடராக நினைத்துக்கொண சுடர்விட்டு எரியும் தீபம் போல் நினைத்துக் கொள்ள வேண்டும். இது மனதில் நெருப்பைப் பற்றிய பயத்தைப் போக்கி அமைதியை ஏற்படுத்தும்.

Latest Videos


அக்னி தோஷத்திற்கு பரிகாரம்

எப்போதும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். நீரில் தர்ப்பை புல்லைப் போட்டு வைத்து அக்னி தோஷம் விலகு வேண்டும் என்று தியானம் செய்ய வேண்டும். தியானத்தை முடித்துவிட்டு தர்ப்பையும் நீரும் உள்ள பாத்திரத்தை கையில் ஏந்தி, "ஓம் ரம் அக்னி தேவாய; சர்வ தோஷ நிவாராய நிவாராய;" என்ற மந்திரத்தை 27 தடவை சொல்ல வேண்டும்.

மந்திரத்தைக் கூறி முடித்துவிட்டு கையில் உள்ள பாத்திரத்தில் இருக்கும் நீரை தலையில் தெளித்துக்கொள்ள வேண்டும். வீடு முழுவதிலும் கூட தெளிக்கலாம். அதே நீரை கொஞ்சம் பருகவும் செய்யலாம். தர்ப்பை புல்லை போட்டு பிரார்த்தனை செய்த நீர் நல்ல சக்திகளை மீட்டுக் கொண்டுவரும்.

இந்த பரிகாரத்திற்காக தரப்பை புல்லை போடும்போது சில துளி இலைகளையும் போடலாம். தியானம் செய்துவிட்டு அந்த நீரைக் குடித்தால் அக்னி தோஷத்தால் உண்டான நோய்கள் விலகும். அதனால் கிடைக்கும் நல்ல சக்திகளுக்கு வழிவிட்டு அக்னி தோஷமும் விலகும்.

click me!