Nov 05 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.! டாப் டக்கரான நாள்.!

Published : Nov 04, 2025, 04:41 PM IST

Today Rasi Palan : நவம்பர் 05, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
நவம்பர் 05, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் மனதில் புதிய தைரியமும், உறுதியும் பிறக்கும். இன்று நீங்கள் மேற்கொள்ளும் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிவடையாமல் இருந்த வேலைகள் அல்லது விஷயங்களில் இன்று வெற்றி காண்பீர்கள். வீண் அலைச்சல்கள் மற்றும் தேவையற்ற பயணங்கள் குறையும். பிறரிடம் பேசும் பொழுது நிதானம் தேவை.
 

நிதி நிலைமை:

கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான ஆதாரங்கள் உருவாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழைய முதலீடுகளால் சிறு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், புதிய முதலீடுகள் கவனம் தேவை. எதிர்பாராத பணத்தேவை உண்டாக்கலாம். சாதுரியமான பேச்சால் வியாபாரத்தில் லாபம் காண முடியும். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் தொழில் சீராக நடக்கும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி இணக்கம் ஏற்படும். காதலில் உள்ளவர்கள் தங்கள் துணை மற்றும் பெற்றோருடன் வெளிப்படையாக பேசி உறவை மேம்படுத்தலாம். குடும்பத்தில் உள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது மன அமைதியைக் கொடுக்கும்.

பரிகாரங்கள்:

உங்கள் ராசியின் அதிபதியான குரு பகவானை வணங்குவது நல்லது. சர்க்கரை பொங்கல், பால் போன்றவற்றை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வணங்கலாம். வெள்ளை துணிகளை ஏழைகளுக்கு வழங்குவது செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். ஏழை, எளியவர்கள் மற்றும் இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories