தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாகும். உங்கள் ரகசியங்களை சக ஊழியரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடலாம். கவனமாக இருக்கவும். நீண்ட காலமாக முடிக்கப்படாமல் இருந்த வேலைகள் முடிவடையும். நண்பர்கள் அல்லது உறவினர்களின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். மாலை நேரத்தில் ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள்.
நிதி நிலைமை:
இன்று செலவுகளை கட்டுக்குள் வைப்பது அவசியம். தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். சிக்கி இருந்த பணம் கைக்கு வந்து சேர வாய்ப்பு உள்ளது. புதிய சொத்துக்கள் வாங்குபவர்கள், ஆவணங்களை சரி பார்க்கவும். சொத்து தொடர்பான பிரச்சனைகளில் மூன்றாம் நபர்களின் தலையீட்டைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்பத் தகராறுகள் அல்லது வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உறவுகளுடன் பதட்டமான சூழல் ஏற்படக்கூடும் என்பதால் நிதானத்தை கடைபிடியுங்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். எந்த முடிவானாலும் மனம் விட்டு பேசி முடிவெடுப்பது நல்லது. பிள்ளைகளின் உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரங்கள்:
இன்றைய தினம் ராகவேந்திரரைஸ்ரீ வழிபடுங்கள். விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று அங்கு துளசிமாலை சாற்றி கல்கண்டு படைத்து வழிபடுங்கள். கல்கண்டை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குங்கள். வாயில்லா ஜீவன்கள் அல்லது ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.