Dhanusu Rasi Palan Nov 21: தனுசு ராசி நேயர்களே, இன்று ஆட்டமே மாறப்போகுது.! இந்த விஷயங்களில் கவனம்.!

Published : Nov 20, 2025, 04:00 PM IST

Nov 21 Dhanusu Rasi Palan : நவம்பர் 21, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
நவம்பர் 21, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும், நீண்ட நாள் திட்டங்களை பற்றி சிந்திப்பதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் உடல் மற்றும் மன ஆற்றல் அதிகமாக இருக்கும். எனினும் அவசர முடிவுகளை தவிர்த்து விடுங்கள். 

உங்களின் பேச்சுத் திறமை இன்று சிறப்பாக இருக்கும். ஆனால் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பயணங்கள் அல்லது தொலை தொடர்புகள் மூலம் நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நிதி நிலைமை:

நிதி நிலைமையைப் பொறுத்தவரை இன்று திருப்திகரமான நாளாக இருக்காது. எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக வாகன பராமரிப்பு அல்லது குடும்பத்தினருக்காக செலவு செய்ய நேரிடலாம். முதலீடுகள் பற்றி ஆழமாக சிந்திப்பீர்கள். பெரிய நிதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. பணம் சம்பந்தமான விஷயங்களில் வெளிப்படையான அணுகுமுறையுடன் நடந்து கொள்ளுங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று திருமண வாழ்வில் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். தம்பதிகளிடையே உணர்ச்சிபூர்வமான பிணைப்பு ஏற்படும். குடும்ப ரகசியங்கள் அல்லது பிற விஷயங்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்த்து விடுங்கள். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் மூலம் சுப செய்திகளை கேட்பீர்கள்.

பரிகாரங்கள்:

நிதி நிலைமை மேம்படவும், மன அழுத்தத்தை குறைக்கவும் மகாலட்சுமி தாயாரை வழிபடலாம். நரசிம்மர் ஆலயங்களில் பானகம் நிவேதனம் செய்து அதை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கலாம். இயலாதவர்கள் அல்லது ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories