சூரியன், சுக்கிரன், செவ்வாய்: மாதத்தின் தொடக்கத்தில் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சஞ்சரிப்பார்கள்.
குரு: டிசம்பர் 4 ஆம் தேதி 11வது வீடான லாப ஸ்தானத்திற்கு திரும்புவதால் நிதி நிலைமை பலப்படும்.
சனி: மாதம் முழுவதும் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பார்.
பொதுவான பலன்கள்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்களைத் தரும் மாதமாக அமையும். இருப்பினும் சில விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தன்னம்பிக்கை, உற்சாகம் இந்த மாதம் அதிகரிக்கும். மாதத்தின் பிற்பகுதி உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணி அழுத்தம் இருந்தாலும் உங்கள் வேலையை சிறப்பாக முடிப்பீர்கள். விரைவான முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது.
நிதி நிலைமை:
குரு பகவான் டிசம்பர் 4 ஆம் தேதிக்கு பிறகு 11வது வீட்டிற்கு மாறுவதால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை பலப்படும். நிதி சவால்கள் குறையும். எட்டாம் வீட்டில் சனி இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன்பு நன்கு ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.
தொழில் மற்றும் வேலை:
உழைக்கும் மக்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். வேலையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலை மாற்றத்தில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். உங்கள் கடின உழைப்பும், திறமைகளும் பாராட்டப்படும். உடன் வேலை செய்பவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் ரிஸ்க் எடுப்பதை தவிர்த்து வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
கல்வி மற்றும் ஆரோக்கியம்:
நான்காம் வீட்டில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் இருப்பதாலும் எட்டாம் வீட்டில் சனி இருப்பதாலும் உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடல்நலத்தை புறக்கணிப்பதன் மூலம் நோய்கள் வளர வாய்ப்பு உள்ளது. எனவே சிறு உபாதைகளை கூட புறக்கணிக்கக் கூடாது. சரியான உடற்பயிற்சி, உணவு ஆகியவற்றில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு இந்த மாதம் நல்ல மாதமாக அமையும். கல்வியில் வெற்றியும், அறிவு சார்ந்த வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் கிடைக்கும். உயர் கல்விக்கான புதிய வாய்ப்புகள் ஏற்படலாம்.
குடும்ப உறவுகள்:
குடும்ப விஷயங்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கக்கூடும். ராகு மற்றும் சனி பகவான் எட்டாம் வீட்டில் இருப்பது திருமணமானவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையைத் தரும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக பேசி, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குடும்ப விஷயங்களில் வெளி நபர்கள் தலையிடுவதை தவிர்க்கவும்.
பரிகாரங்கள்:
சனிக்கிழமைகளில் உளுந்து தானம் செய்வது நல்லது. தடைகள், சிரமங்கள் குறைவதற்கு அனுமனை வழிபடலாம். தினமும் சூரிய பகவானை வணங்குவது, ஆதித்ய ஹிருதயம் படிப்பது நன்மை தரும். விஷ்ணு நாராயணனை வணங்குவது நற்பலன்களை அதிகரிக்கும். கோயில்களில் நடைபெறும் அன்னதானங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)