சூரியன்: டிசம்பர் 16ஆம் தேதிக்கு பின்னர் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.
சுக்கிரன்: இந்த மாதம் தைரியம் மற்றும் இளைய சகோதரர்களை குறிக்கும் வீடான மூன்றாம் வீட்டில் அமர்கிறார்ழ
புதன்: மாதத்தின் தொடக்கத்தில் தன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்கிறார்.
குரு: மாதத்தின் தொடக்கத்தில் 11-ம் வீட்டில் இருக்கும் அவர் டிசம்பர் 4ஆம் தேதி தொழிற் ஸ்தானமான பத்தாம் வீட்டில் நுழைகிறார்.
சனி: மாதம் முழுவதும் திருமணம், கூட்டத்தொழில், களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் அமர்ந்திருப்பார்.
பொதுவான பலன்கள்:
இந்த மாதம் ஒழுக்கம் நிறைந்த மாதமாக இருக்கும். இலக்குகளில் கவனம் செலுத்தி முன்னேறுவீர்கள். உங்கள் புத்திசாலித்தனமும், திட்டமிடுதலும் வெற்றியைத் தேடித்தரும். மாதத்தின் பிற்பகுதியில் கடின உழைப்புக்கான அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும். திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
நிதி நிலைமை:
வருமானம் இந்த மாதம் சீராக இருக்கும். குருவின் பார்வை காரணமாக வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பழைய முதலீடுகளில் இருந்து பணவரவு கிடைக்கலாம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நிதி விஷயங்களில் கவனமும் எச்சரிக்கையும் தேவை. திட்டமிட்ட பட்ஜெட்டுடன் செலவு செய்வது நல்லது. பணம் சம்பாதிப்பதில் குறுக்கு வழியை தவிர்க்கவும்.
தொழில் மற்றும் வேலை:
இன்று உங்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவீர்கள். பணியிடத்தில் உடன் வேலை செய்பவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நீண்ட கால உறவுகள் ஏற்பட்டு வணிக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வெளிநாடு தொடர்பான வணிகம் ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
கல்வி மற்றும் ஆரோக்கியம்:
மாதம் முழுவதும் கேதுவின் சஞ்சாரம் காரணமாக தொற்று நோய்கள் ஏற்படலாம். குறிப்பாக பெண்களுக்கு முழங்கால் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக வேலைப்பளு, கவனச் சிதறல்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். எனவே போதுமான தூக்கம், உடற்பயிற்சி செய்வது நல்லது.
மாணவர்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவீர்கள். கல்வி தொடர்பான செயல்பாடுகள் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் உயர் கல்வி வாய்ப்புகள் கிடைக்கலாம். கவனத்துடனும், விடாமுயற்சியுடன் இருந்தால் நிலையான முன்னேற்றத்தைக் காணலாம்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் அன்பும், ஒற்றுமையும் காணப்படும். சகோதரர்கள் மீதான பாசம் வெளிப்படும். சனி பகவானின் அமர்வால் திருமண உறவுகளில் சில பிரச்சனைகள், மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. துணையுடன் இணக்கமாக இருக்க பொறுமையும், அதிக கவனமும், வெளிப்படையான பேச்சு தேவை. குழந்தைகளால் நன்மை உண்டாகும். வீடு மற்றும் குடும்பம் தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் தேவைப்படலாம்
பரிகாரங்கள்:
புதன்கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபடுவது தடைகளை நீக்க உதவும். தேங்காயில் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும். பசுக்களுக்கு உணவு தருவது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். புதுக்கோட்டை புவனேஸ்வரியை வழிபடுவது நற்பலன்களைக் கூட்டும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)