துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் துலாம் ராசிக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கும் வாரமாக இருக்கும். நீங்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்களில் அடுத்தடுத்து வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள இது நல்ல நேரமாக இருக்கும்.
தன்னம்பிக்கையுடன் செயல்படுவது வெற்றியை உறுதி செய்யும். உங்கள் எதிரிகளை தோற்கடித்து வெற்றிகளைப் பெறுவீர்கள். சில சமயங்களில் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கலாம். ஆனால் முடிவில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
நிதி நிலைமை:
இந்த வாரம் முழுவதும் பணப்புழக்கம் சீராக இருக்கும். பொருளாதார ரீதியாக நிதி நிலைமை மேம்படும். பிள்ளைகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக செலவு செய்வீர்கள்.
தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். சேமிப்பு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய வாகனம், வீடு, மனை வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். கடன் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
ஆரோக்கியம்:
இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவு முறை தேவை. கழுத்து, தொண்டை தொடர்பான பிரச்சனைகள் எழக்கூடும் என்பதால் கவனக் குறைவை கைவிட வேண்டும். பெரிய அளவிலான உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது.
கல்வி:
மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ராகு பகவானின் அருளால் புத்திசாலித்தனம் மேம்படும். படிப்பில் கவனம் செலுத்துபவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். இன்ஜினியரிங் மருத்துவம் போன்ற உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் சிறப்புக்களைப் பெறுவீர்கள். பெற்றோர்களுக்கு பெருமை கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
தொழில் விரிவாக்கத்திற்கான நல்ல சூழல் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். நிர்வாகத்தில் உங்கள் மதிப்பு மரியாதையைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் பணிகளை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்யலாம். எனவே எச்சரிக்கையுடன் செயல்படவும்.
அனைத்து விஷயங்களையும் சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய பதவிகள், விஷயங்கள் தாமதமானாலும் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் இருப்பவர்களையும் உறவினர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. திருமண உறவுகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். காதல் உறவுகளுக்கு நேரம் நன்றாக இருந்தாலும், சில பிரச்சனைகள் வரலாம்.
திருமணமாகாதவர்களுக்கு சுப நிகழ்வுகள் அல்லது வரன் அமையும் வாய்ப்புகள் உண்டு. குழந்தை விஷயத்தில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில் அபிராமி அந்தாதி அல்லது லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மை தரும். புற்று உள்ள கோவில்களுக்கு சென்று பாலபிஷேகம் செய்வது கூடுதல் நன்மைகளைத் தரும். ஜென்ம நட்சத்திரம் அன்று வழிபாடுகள் செய்வது நல்லது. கோவிலின் வெளியில் அமர்ந்திருக்கும் யாசகர்களுக்கு ஒரு வேளைக்கான உணவு வாங்கிக் கொடுப்பது நன்மையை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)