2023 ஆம் ஆண்டு நடிகை சமந்தா பற்றி முக்கிய கணிப்பை வெளியிட்டார். அதில் அவர் 2025-க்குள் சமந்தாவுக்கு பெரிய உறவு மாற்றம் நடக்கும் என்றும், 2026 ஆம் ஆண்டு சமந்தா வெளிநாட்டில் புதிய அத்தியாயத்தை தொடங்குவார் என்றும் கூறியிருந்தார். அவர் கூறியது போலவே 2025 ஆம் ஆண்டில் சமந்தா இரண்டாவது திருமணத்தை முடித்துள்ளார். இதை மீண்டும் பகிர்ந்துள்ள பிரசாந்த் கினி, தன்னுடைய கணிப்பு சரியாக இருந்ததாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வங்காளதேசம் குறித்த கணிப்பு
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா பற்றி 2023 தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் 2024 ஆகஸ்ட் மாதத்தில் ஷேக் ஹசீனா மிகப்பெரும் சிக்கலை சந்திப்பார் அல்லது படுகொலை முயற்சிக்கு ஆளாக நேரிடலாம் என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் கூறியது போலவே 2024 ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
நேபாளம் குறித்த கணிப்பு
அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், நேபாளத்தில் ஜனநாயக ஆட்சி முடிவுக்கு வந்து 2025க்குள் முடியாட்சி வரும் என்று அவர் கணித்திருந்தார். 2023 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த அவரின் இந்த கணிப்பு மீண்டும் கவனத்தை ஈர்த்தது. மேலும் டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பு பற்றி இவர் முன்னரே கணித்திருந்ததாக அது தொடர்பான செய்திகளும் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் விஜய் துவக்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் பற்றி பிரசாந்த் கினி தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.