Numerology: உங்க பிள்ளை இந்த தேதியில பிறந்தவங்களா? அப்போ பெற்றோருக்குக் குபேர யோகம் கன்பார்ம்.! தலையெழுத்தை மாற்றும் அதிர்ஷ்ட தேதிகள்!

Published : May 20, 2026, 04:14 PM IST

Date of Birth Numerology: எண் கணிதத்தின் படி சில தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு செல்வத்தையையும், மரியாதையையும் ஒரு வசதியான வாழ்க்கையையும் அமைத்து தருவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த தேதிகள் குறித்து இங்கு பார்க்கலாம். 

PREV
17
Date of Birth Numerology

எண் கணிதத்தின்படி ஒருவர் பிறந்த தேதியின் அடிப்படையில் அவரது ஆளுமைத் திறன்கள், குணாதிசயங்கள் வாழ்க்கை முறையை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்த குழந்தைகள் 25 வயதுக்கு மேல் எதிர்பாராத செல்வத்தையும், அதிகாரத்தையும் அடைவார்களாம். அதேபோல் தங்கள் பெற்றோருக்கு சமூக உயர்ந்த மதிப்பையும், மரியாதையும், வசதியான வாழ்க்கையையும் அளிப்பார்களாம். அந்த தேதிகள் என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

Numerology: இந்த 13 தேதிகளில் பிறந்தவர்கள் உண்மையாக காதலிப்பாங்களாம்.! இவங்களுக்கு 100% லவ் மேரேஜ் தான் நடக்குமாம்.!

27
ரேடிக்ஸ் எண்ணை கணக்கிடுவது எப்படி?

எண் கணிதம் ரேடிக்ஸ் எண்ணின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எந்த மாதத்திலும் 1 முதல் 9ஆம் தேதி வரையில் பிறந்தவர்களுக்கு அந்தந்த தேதிகளை ரேடிக்ஸ் எண் ஆகும். அதுவே 10 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் பிறந்தவர்களுக்கு முதல் இரு எண்களை கூட்டினால் ரேடிக்ஸ் எண் கிடைக்கும். உதாரணமாக ஒருவர் பிறந்த தேதி 25 என்றால், அதைக் கூட்டும் பொழுது 2+5=7 வரும். அதுவே உங்கள் ரேடிக்ஸ் எண் என்று அழைக்கப்படுகிறது.

Numerology: இந்த 6 தேதிகளில் பிறந்தால் வறுமையே வராது.! குபேரனின் நேரடிப் பார்வையில் இருக்கும் அதிர்ஷ்டசாலிகள்.!

37
பெற்றொருக்கு அதிர்ஷ்டத்தை தரும் குழந்தைகள் பிறந்த தேதிகள்

ஒவ்வொரு மாதத்திலும் 1,10,19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சூரியனின் ஆளுகையின் கீழ் வருகிறார்கள் அதே போல் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வணிகத்தின் அதிபதியான புதன் பகவானின் வலிமையைப் பெற்றவர்கள். 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மங்களம் மற்றும் சுப நிகழ்வுகளின் காரகரான குருவின் சக்தியை கொண்டிருக்கிறார்கள். மேற்குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த குழந்தைகள் சிறு வயதில் அதிக சுட்டித்தனம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். படிப்பில் சராசரியான மாணவர்களாக இருப்பார்கள். ஆனால் 20 வயதை எட்டிய பிறகு அவர்களுக்கு சொந்த காலில் நிற்க வேண்டும் என்கிற ஆசை அதிகரிக்கும்.

Numerology: இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சிறு வயதில் ரொம்ப கஷ்டப்படுவார்கள்.! ஆனால் 40 வயத்துக்குப் பின் சனி பகவான் அருளால் வாழ்க்கை மாறும்.!

47
கடின உழைப்பாளிகள்

தனது கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் 25 வயது முதல் 35 வயதிற்குள் தொழிலில் நல்ல நிலையை அடைவார்கள். இவர்களின் அதிர்ஷ்டம் அவர்களது பெற்றோருக்கு பெரிதும் பலனளிக்கும். வறுமையில் வாடிய பெற்றோர்கள் இந்த குழந்தைகளின் அதிர்ஷ்டம் காரணமாக சொந்த வீடு வாங்குவார்கள். குடும்பமே ஒரு ஆடம்பரமான வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும். இந்த தேதிகளில் பிறந்த குழந்தைகள் தங்கள் பெற்றோர் மீது மிகுந்த அன்பு கொண்டிருப்பார்கள். தாங்கள் சம்பாதிக்க தொடங்கிய பின்னர் தங்கள் பெற்றோர்களை அரசர்களைப் போல் நடத்த வேண்டும் என்று அவர்களுக்குள் வேட்கை கொண்டு இருப்பார்கள்.

Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?

57
பெற்றோருக்கு பார்த்து பார்த்து செய்வார்கள்

பெற்றோருக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்வார்கள். வீடு கட்டி கொடுப்பது, வாகனம் வாங்கி கொடுப்பது, கார் வாங்கி கொடுப்பது, தாயாருக்கு நகைகள் வாங்கிக் கொடுப்பது என்று பல வழிகளில் தங்களது பெற்றோருக்கு கைமாறு செய்வார்கள். சமூகத்தில் பெற்றவர்களுக்கு மரியாதையும், மதிப்பையும் பெற்றுத் தருவார்கள். குறிப்பாக 1,5,9 ஆகிய வரிசைகளில் பிறந்த குழந்தைகள் பிறந்திருக்கும் வீட்டில் பெற்றோர்கள் முதுமையைப் பற்றி கவலைபடத் தேவையில்லை. ஏனென்றால் இந்த குழந்தைகள் பெற்றோரை கண் இமை போல பாதுகாப்பார்கள்.

67
முக்கிய குறிப்பு

எண் கணிதம் மற்றும் ஜோதிடம் ஆகியவை ஒரு வழிகாட்டி மட்டுமே. எந்த தேதியில் பிறந்த குழந்தைகளாக இருந்தாலும் அவர்களின் வளர்ப்பு முறை, அவர்கள் வளர்ந்த விதம், குடும்பச்சூழல் ஆகியவையே அந்த குழந்தையை பொறுப்பானவர்களாக மாற்றுகிறது. மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் இணையத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் அமைந்தவையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

77
பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories