
ஜோதிட சாஸ்திரங்களின்படி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. அப்படி ராசிகளை மாற்றும்பொழுது அந்த கிரகத்தில் ஏற்கனவே பயணித்து வரும் கிரகங்களுடன் சேரும்பொழுது அல்லது மற்றொரு கிரகங்களை நேர் எதிரே சந்திக்கும் பொழுது சில யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் சக்தி வாய்ந்த தசாங்க யோகத்தை சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி உருவாக்குகின்றன. சூரியன் மற்றும் சுக்கிரன் இரு கிரகங்களும் 36 டிகிரி கோண அமைப்பில் சந்திக்கும் பொழுது இந்த யோகம் உருவாகிறது. தசாங்க யோகமானது செல்வம் வெற்றி, முன்னேற்றம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியை வழங்கும் என நம்பப்படுகிறது. சூரியன் ஆற்றல், தலைமைத்துவம் மற்றும் மரியாதையை குறிக்கும் கிரகமாகும். சுக்கிரன், செல்வம், அழகு, காதல், ஆடம்பரத்தை குறிக்கும் கிரகமாகும். இந்த இரு கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் பலனளிக்கும் என்றாலும், 5 ராசிகளுக்கு சிறப்பான பலன்களை வழங்க உள்ளது.
மேஷ ராசிக்காரர்களுக்கு தசாங்க யோகம் நல்ல பலன்களை அளிக்க உள்ளது. தசாங்க யோகம் மேஷ ராசியின் ஐந்தாவது வீட்டை பாதிக்கிறது. இதனால் கலை, இலக்கியம், ஊடகம், படைப்புத் துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகலாம். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி கிடைக்கும். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். சிக்கியிருந்த பணம் கைக்கு வருவது அல்லது எதிர்பாராத பண வரவு ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். மன உறுதியும், ஆரோக்கியமும் மேம்படும். வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு வழிபாடு செய்வது, ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற மந்திரத்தை 41 முறை ஜெபிப்பது பலன்களை பெருக்கும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் நான்காவது வீட்டை பாதிக்கிறது. இதனால் புதிய வீடு, வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே செய்திருந்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அமையும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சனைகள் தீரும். இதன் காரணமாக மன அழுத்தம் குறையும். உடல் நலன் மேம்படும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு அல்லது மகாலட்சுமிக்கு பூஜை செய்வது நன்மைகளைத் தரும்.
மிதுனத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் மற்றும் கடகத்தில் சூரியனின் இருப்பு லக்கின பாவத்தை பலப்படுத்துகிறது. இதன் காரணமாக சமூகத்தில் மரியாதையும் அங்கீகாரமும் அதிகரிக்கும். ஐடி, ஊடகம், எழுத்து மற்றும் தகவல் தொடர்பு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த காலம் சிறப்பானதாக இருக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் லாபம் கிடைக்கலாம். நிதி நிலைமை வலுப்பெறும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன்கள் அமையும். மனதில் தெளிவும், உற்சாகமும் அதிகரிக்கும். லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது அல்லது வியாழக்கிழமைகளில் குருபகவானை வழிபடுவது பலன்களை மேம்படுத்தும்.
தசாங்க யோகம் கன்னி ராசியின் 11வது வீட்டை பாதிக்கிறது. இதன் காரணமாக எதிர்பாராத பணவரவு, முதலீடுகளில் லாபம், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய திட்டங்கள் மூலம் ஒப்பந்தங்கள் கைக்கு வரும். மிதுனத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் தொழில் பாவத்தை பலப்படுத்தி அங்கீகாரத்தை தரும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். ஆதரவற்றவர்களுக்கு உணவளிப்பது, மாற்று திறனாளிகளுக்கு உதவிகளை செய்வது, சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வது ஆகியவை பலன்களை பெருக்கும்.
தசாங்க யோகம் துலாம் ராசியின் பத்தாவது வீட்டை பாதிக்கிறது. இதனால் பணியில் பதவி உயர்வு, அங்கீகாரம் மற்றும் சமூக மரியாதை கிடைக்கும். சிக்கி இருந்த பணம் கைக்கு வரும். திடீர் பணவரவு ஏற்படும் காதல் உறவுகளில் இனிமையான தருணங்கள் உருவாக்கும். துணைவியுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மனதில் உற்சாகங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி அம்மனை வழிபடுவது அல்லது ‘ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியை நமஹ’ மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது நன்மைகளை தரும்.
மற்ற ராசிகளுக்கும் இந்த யோகத்தால் பலன் கிடைக்கும் என்றாலும் மேற்கூறப்பட்ட ஐந்து ராசிகளுக்கு இந்த யோகம் சக்தி வாய்ந்ததாக இருக்கும். கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய பிற ராசிகளுக்கும் இந்த யோகம் மிதமான பலன்களை தரலாம். குறிப்பாக நிதி உறவுகள் மற்றும் ஆரோக்கியத்தில் முன்னேற்றங்கள் ஏற்படலாம். ஆகஸ்ட் 11 உருவாகும் இந்த யோகம் சில தினங்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். விஷ்ணு அல்லது மகாலட்சுமி கோயிலுக்கு சென்ற பூஜை செய்வது நன்மைகளை பெருக்கும். ஏழைகளுக்கு உணவு, உடை, பணதானம் செய்யலாம். இந்த தசாங்க யோகத்தை முழுமையாக அனுபவிக்க மேற்கூறிய பரிகாரங்களை செய்து,, நேர்மறையான மனநிலையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
(குறிப்பு: மேற்கூறப்பட்ட ஜோதிடப் பலன்கள் பொதுவானவையே. இது இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்களின் கருத்துக்கள் அடிப்படையில் பெறப்பட்டவை. இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஜோதிடப் பலன்கள் ஒருவரின் தனிப்பட்ட ஜாதகம், கிரக நிலைகள் மற்றும் தசா புத்திகளை பொறுத்து மாறுபடலாம். முழுமையான பலன்களுக்கு அனுபவமிக்க ஜோதிடரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது)