
இன்றைய ராசி பலன்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க. இன்று எந்த ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் காத்திருக்கிறது என்பதை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
உடல்நலத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். தாய்வழி உறவினர்களுடன் தகராறுகள் வரலாம். நீங்கள் தொடங்கும் காரியங்களில் தாமதம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் தள்ளிப்போகும். வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் கொஞ்சம் சிரமம் ஏற்படலாம் . தொழில், வியாபாரம் மந்தமாக இருக்கும்.
முக்கியமான பணிகளைத் தொடங்கி அதில் வெற்றி காண்பீர்கள். குடும்ப விஷயத்தில் புதிய யோசனைகளைச் செயல்படுத்துவீர்கள். நிதிநிலைமை எதிர்பார்த்தபடி சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் தைரியமாக முடிவுகளை எடுப்பீர்கள். வேலையில்லாதவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கடன் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் சில பணிகளை முடிப்பீர்கள். தொழில், உத்தியோகத்தில் உயர் பதவிகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
உடல், மனநலப் பிரச்சினைகள் எரிச்சலை உண்டாக்கும். மற்றவர்கள் மீதான உங்கள் சிந்தனைப் போக்கை மாற்றிக்கொள்வது நல்லது. நினைத்த நேரத்தில், நினைத்தபடி பணிகள் முடியாது. உறவினர்கள், நண்பர்களுடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாது. உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.
புதிய பொருட்கள், வாகன வசதிகளைப் பெறுவீர்கள். நிதி முயற்சிகள் சாதகமாக அமையும். உறவினர்கள், நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகப் பொறுப்புகளைத் திறமையாகக் கையாள்வீர்கள். தூரப் பயணங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. எடுத்த காரியங்கள் சுமுகமாக நடக்கும். வேலையில்லாதவர்களுக்குச் சாதகமான நாள்.
வீட்டிலும் வெளியிலும் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும். எடுத்த காரியங்களில் தாமதம் ஏற்பட்டாலும், மெதுவாக முடித்துவிடுவீர்கள். முக்கிய விஷயங்களில் சகோதரர்களின் ஆலோசனையைப் பெற்று முன்னே செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகச் சூழல் சாதகமாக இருக்கும்.
நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். பண விஷயத்தில் மற்றவர்களுக்கு அவசரப்பட்டு வாக்குறுதி கொடுக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும்.