Negative Energy: உங்க வீட்ல இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கண்டிப்பா நெகட்டிவ் எனர்ஜி இருக்கு!

Published : Jul 23, 2026, 09:15 PM ISTUpdated : Jul 23, 2026, 09:19 PM IST

Negative Energy: வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி அதிகமானால் பிரச்னைகள் நிச்சயம் என ஜோதிட நிபுணர்கள் சொல்கிறார்கள். வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி உள்ளதை எப்படி கண்டுபிடிக்கிறது? வாங்க பார்க்கலாம்.

PREV
16
வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

ஜோதிட, வாஸ்துப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவித ஆற்றல் இருக்கும். அது பாசிட்டிவ்வா இருந்தா, வீட்ல அமைதி, ஆரோக்கியம், சந்தோஷம் பெருகும். ஆனா, சில காரணங்களால நெகட்டிவ் எனர்ஜி அதிகமானா, அது குடும்ப உறுப்பினர்களோட மனநிலை, உடல்நலம், பண விஷயத்துல கெட்ட விளைவுகளை ஏற்படுத்தும். வீட்ல நெகட்டிவ் எனர்ஜி இருக்கிறதை எப்படி கண்டுபிடிக்கலாம்னு ஜோதிட நிபுணர்கள் சொல்றத இங்க பார்க்கலாம்.

26
வீட்டில் தேவையில்லாத சண்டைகள்

வீட்ல சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் பெரிய சண்டை வருதா? குடும்பத்துல ஒற்றுமை குறைஞ்சுகிட்டே போகுதா? அப்போ இது நெகட்டிவ் எனர்ஜியோட அறிகுறிதான்னுஜோதிட நிபுணர்கள் சொல்றாங்க. அமைதியா இருந்த குடும்பத்துல திடீர்னு பதற்றம் அதிகமானா, சூழல்ல ஆற்றல் சமநிலை இல்லாம இருக்குன்னு அர்த்தம். இது ரொம்ப நாள் தொடர்ந்தா மன அழுத்தமும் அதிகமாகும்.

36
பொருட்கள் அடிக்கடி பழுதாகுதா?

எலக்ட்ரானிக் பொருட்கள், கடிகாரம், லைட்னு அடிக்கடி பழுதாகுதா? இல்ல பொருட்கள் தானா கீழ விழுதுதா? இதுவும் நெகட்டிவ் எனர்ஜியோட அறிகுறிதான்னு சொல்றாங்க. அதேபோல, வீட்ல இருந்தாலும் மனசுக்கு அமைதி இல்லாம இருக்கிறது, வீட்ல இருக்கவே பிடிக்காம வெளிய போகத் தோணுறது, குடும்பத்துல ஒரு இடைவெளி வர்ற மாதிரி உணர்றது எல்லாமே நெகட்டிவ் எனர்ஜி அதிகமானா வரும்னு ஜோதிடம் சொல்லுது.

46
வீட்டில் பணம் தங்கவே மாட்டேங்குதா?
நல்ல வருமானம் வந்தாலும் வீட்ல பணம் தங்கவே மாட்டேங்குதா? ஏதாவது ஒரு ரூபத்துல செலவு வந்துகிட்டே இருக்கா? இதை வாஸ்து சாஸ்திரம், சமநிலையற்ற ஆற்றலோட அறிகுறியா சொல்லுது. இது நேரடியா நெகட்டிவ் எனர்ஜி இல்லைன்னாலும், வீட்டுச் சூழல் சரியில்லாம இருந்தா, அது நம்ம முடிவுகள பாதிக்கும்னு பண்டிதர்கள் சொல்றாங்க.
56
தேவையில்லாத சோர்வு
வீட்ல இருக்கும்போது எப்பவுமே சோர்வா உணர்றீங்களா? ஆனா, வீட்டை விட்டு வெளிய போனதும் கொஞ்சம் ரிலீஃபா இருக்கா? இதுவும் நெகட்டிவ் எனர்ஜியோட அறிகுறிதான்னு ஜோதிட பண்டிதர்கள் சொல்றாங்க. அதேபோல, ராத்திரியில சரியா தூக்கம் வராம இருக்கிறது, கெட்ட கனவுகள் வர்றது கூட இதோட பாதிப்புதான்.
66
நெகட்டிவ் எனர்ஜியை விரட்டுவது எப்படி?

மேலும், வளர்ப்புச் செடிகள் சட்டென்று வாடிப்போவது, வளர்ப்புப் பிராணிகள் அசாதாரணமாக நடந்துகொள்வது, வீட்டின் சில மூலைகளில் ஒருவித துர்நாற்றம் அல்லது கனத்த உணர்வு நீடிப்பது போன்றவையும் இதன் சமிக்ஞைகளே. இத்தகைய அறிகுறிகள் உங்கள் வீட்டில் தென்பட்டால், உடனடியாக வீட்டைத் தூய்மைப்படுத்தி, கல் உப்பு கரைத்த நீரால் தரை துடைப்பது, சாம்பிராணி அல்லது தூபம் போடுவது போன்ற எளிய பரிகாரங்கள் மூலம் எதிர்மறை ஆற்றலை நீக்கி, மீண்டும் நேர்மறை ஆற்றலையும் (Positive Energy) அமைதியையும் கொண்டு வரலாம்.

வீட்ல இருக்குற நெகட்டிவ் எனர்ஜி விலகி, பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க, வீட்டை சுத்தமா வெச்சுக்கணும். காத்தும் வெளிச்சமும் நல்லா வர்ற மாதிரி பார்த்துக்கணும். காலையில சூரிய ஒளி வீட்டுக்குள்ள வர்றது பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும்னு வாஸ்து நிபுணர்கள் சொல்றாங்க. அதேபோல, விளக்கு ஏத்துறது, கணபதி அல்லது லட்சுமி தேவியை வழிபடுறது மனசுக்கு அமைதியைத் தரும்னும் அவங்க சொல்றாங்க.

Read more Photos on
click me!

Recommended Stories