Daily Horoscope September 12: மேஷ ராசி நேயர்களே, சவால்கள் காத்திருக்கு.! பொறுமை மட்டுமே வெற்றியை தரும்.!

Published : Sep 12, 2025, 08:06 AM IST

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சவால்கள் நிறைந்த நாள். வேலை, நிதி விஷயங்களில் கவனம் தேவை. ஆனால், அமைதியாக இருந்தால் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும்.

PREV
12
மேஷம் (Aries) - கோபம் வேண்டாம்.! கம்முன்னு இருக்கனும்.!

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சவாலான நேரமாக இருக்கும். ஆனால் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் உங்கள் இயல்பான தைரியம், புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பால் எந்த சூழ்நிலையையும் வெற்றிகரமாக சமாளிக்க முடியும். வேலை தொடர்பான விஷயங்களில் சில தடைகள் தோன்றலாம். குறிப்பாக மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து முரண்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி, அமைதியாக பேசியால் எந்த பிரச்சினையும் பெரிதாக மாறாது.

நிதி நிலையைப் பொறுத்தவரை, இன்று கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். முதலீடு செய்ய நினைத்தால் சற்று காத்திருக்கவும். பணம் தொடர்பான விவாதங்களில், ஒருவருடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடையே சொத்து விஷயத்தில் சிக்கல்கள் வந்தாலும், இறுதியில் உங்கள் புத்திசாலித்தனத்தால் அதைத் தீர்க்க முடியும்.

வியாபாரம் செய்பவர்கள் இன்று சற்று மந்தநிலை உணரக்கூடும். பழைய வாடிக்கையாளர்கள் ஆர்டரை தள்ளிப் போடலாம் அல்லது லாபம் குறைவாக இருக்கலாம். ஆனால் இதை நீண்டகால சிக்கலாக கருத வேண்டாம். சற்று பொறுமையாக காத்திருந்தால் அடுத்த வாரங்களில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

22
குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும்.!

குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். உறவினர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். சிறிய சண்டைகள் அல்லது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவை விரைவில் குணமடைந்து குடும்பத்தில் சிரிப்பு மற்றும் சந்தோஷம் நிறைந்திருக்கும்.

உடல்நிலை சரியாக இருக்கும். ஆனால் மன அழுத்தம் அதிகரித்தால் தலைவலி அல்லது சோர்வு ஏற்படலாம். அதனால் சிறிது ஓய்வு எடுத்து, தியானம் அல்லது யோகா செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட உடை: லேசான பருத்தி சட்டை/சாடி வழிபட வேண்டிய தெய்வம்: முருகன் அப்பிரகாரம்: இன்று காலை சூரியனை நோக்கி தண்ணீர் அர்ப்பணித்தால் நல்ல பலன் கிடைக்கும். முதலீடு: தற்காலிகமாக தவிர்க்கவும்.

Read more Photos on
click me!

Recommended Stories