
அன்பென்ற மழையில் அனைவரையும் நனையவைக்கும் மனமுள்ள மேஷ ராசி நேயர்களே, இன்று உங்கள் மனநிலை சலனம் அடையலாம். பணியிடம் மற்றும் குடும்ப சூழலில் சிக்கல்கள் வந்தாலும், நீங்கள் எடுத்த முடிவுகள் மிகவும் சரியாகவே இருக்கும். நெருங்கிய நண்பர்கள் உதவ முன்வருவர். புதிதாக கடன் வாங்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. உடல்நலனில் அக்கரை தேவை. மன உறுதி மற்றும் அனுபவம் தேவைப்படும் நாள். வரவு செலவில் சிறிது கவனம் செலுத்துங்கள். அன்பானவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
லக்கி எண்: 3 | லக்கி நிறம்: சிவப்பு | பரிகாரம்: முருகனை வழிபடவும்
கலைகளில் அவள் ஓவியம் என எல்லா கலைகளையும் ரசிக்கும் குணம் கொண்ட உங்கள் முயற்சிகள் இன்று வெற்றியளிக்கக்கூடியவை. வேலை தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். கடந்த நாட்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வீட்டு வேலைகளில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும். பழைய கடன் பாக்கிகளை தீர்க்க முயற்சிக்கலாம். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆலோசனை பயனளிக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.லக்கி எண்: 6 | லக்கி நிறம்: வெள்ளை | பரிகாரம்: லட்சுமியை பூஜிக்கவும்
அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு என ஒத்துக்கொள்வது மட்டுமல்லாமல் இருவரையும் இறைவனாகவே வழிபடும் குணம் கொண்ட உங்களுக்கு இன்று தொழிலில் புதிய வாய்ப்புகள் வரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். திடீர் பயண வாய்ப்பு ஏற்படலாம். அதேபோல் குடும்பத்தில் சிலருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆனால் அமைதியாக நடந்தால் அதையும் சரி செய்ய முடியும். பணவரவு சீராக இருக்கும். சிலர் புதிய வேலைவாய்ப்பு பெறலாம். இறைவன் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். லக்கி எண்: 5 | லக்கி நிறம்: பச்சை | பரிகாரம்: விநாயகரை வழிபடுங்கள்
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என நேர்மையின் பக்கம் நிக்கும் நீங்கள் இன்று மனதுக்கு பிடித்த செயல்களில் ஈடுபடுவீர்கள். தாமதமான பணிகள் விரைவில் முடிவடையும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். குடும்ப உறவுகளில் நெருக்கம் கூடும். பெண்கள் செல்வாக்குடன் செயல்படுவர். மன நிம்மதியை தரும் நாள். உடல்நலனில் சீர்திருத்தம் தேவைப்படும். கணவன் மனைவிக்கும் மனைவி கணவருக்கும் ஆதரவாக இருப்பர். லக்கி எண்: 2 | லக்கி நிறம்: நீலம் | பரிகாரம்: சந்திரனை பூஜிக்கவும்
சிங்க நடைபோட்டு சிகரத்தில் ஏறும் நீங்கள், சூழ்நிலைகளை தளராமல் எதிர்கொள்வது அவசியம். நீங்கள் எடுத்த முடிவுகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். நண்பர்கள் வழியாக புதிய வாய்ப்பு கிடைக்கும். பழைய கடன்கள் காணாமல் போகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிதாக வரவுள்ள நபர்கள் மகிழ்ச்சி தருவர். தொழிலில் முன்னேற்றம் தெரியும். நண்பர்களின் உதவி உங்களுக்கு ஆதரவாக இருக்கும். லக்கி எண்: 1 | லக்கி நிறம்: ஆரஞ்சு | பரிகாரம்: சூரியனை வணங்குங்கள்
தொட்டில் மேலே முத்து மாலை போன்ற பாடல்களை கேட்டு நித்திரைக்கு போகும் குழந்தை போன்ற மனம் உடைய உங்களுக்கு இன்று நேர்முக தேர்வுகள் வரும். குழந்தைகள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய நாள். கணவன்–மனைவி இடையே புரிதல் தேவைப்படும். புதிய செயலில் அடி எடுத்து வைப்பதற்கான நல்ல நேரம் இது. நீண்டநாள் திட்டங்களை தயார் செய்யலாம். சமூக வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். உடன் பணிபுரிவோர் ஆதரவாக இருப்பர். லக்கி எண்: 9 | லக்கி நிறம்: வெள்ளி | பரிகாரம்: விஷ்ணுவை வணங்கவும்
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என நம்பிக்கையுடன் வாழ்வில் போராடும் குணம் கொண்ட உங்களுக்கு இன்று புதிய பொறுப்பு மற்றும் பதவிகள் தேடி வரலாம். வணிகம் மற்றும் தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். உறவுகளில் சிறு சிறு பிரச்சினை ஏற்பட்டு அது சரியாகலாம். தொழிலில் நிதானமாக செயல்பட வேண்டிய நாள். யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். பழைய நண்பர்கள் மீண்டும் சந்திப்பார்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பர். லக்கி எண்: 4 | லக்கி நிறம்: நீலம் | பரிகாரம்: துலசிக்கண்ணி பூஜை
ஒன்றே குலம் என்று பாடுவோம் என அனைவரையும் ஒரே விதமாக மதிக்கும் குணம் கொண்ட நீங்கள் இன்று செயல்களில் தெளிவான முடிவுகள் எடுக்க வேண்டிய தேவை உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் பரஸ்பர புரிதல் தேவைப்படும். யாருடைய பேச்சுக்கும் பயந்தோ, தவறாக புரிந்துகொண்டோ இடைவெளி ஏற்படுத்த வேண்டாம். பணம் தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். உடல்நலம் சீராக இருக்கும். கையிருப்பை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பர். லக்கி எண்: 8 | லக்கி நிறம்: கருப்பு | பரிகாரம்: நாகபூஜை
உலகம் பிறந்தது எனக்காக என சந்தோஷமாக பாடி திரியும் மனநிலையில் இருக்கும் நீங்கள் இன்று புதிய முயற்சியில் வெற்றி பெறக்கூடிய நாள். உங்கள் சிந்தனை பலருக்கும் வழிகாட்டியாக இருக்கும். பயணங்கள் மன நிறைவை தரும். தொழில் வளர்ச்சியில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷ சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. மனம் புத்துணர்ச்சி அடையும். அக்கம் பக்கத்து வீட்டினர் ஆதரவாக இருப்பர். லக்கி எண்: 7 | லக்கி நிறம்: மஞ்சள் | பரிகாரம்: குரு பகவானை வழிபடவும்
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்தது ஏனோ என கவிதை படிக்கும் மனநிலையில், அதிகம் காதல் வயப்படும் உங்களுக்கு எதிர்பாராத பண வரத்து ஏற்படலாம். வாகனப் பிழைகள், வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்களது மேலான ஆலோசனை மதிக்கப்படும். பழைய விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம். வேலை மாற்றம் குறித்து யோசிக்கலாம். பள்ளி நண்பர்கள் ஆதரவாக இருப்பர். லக்கி எண்: 10 | லக்கி நிறம்: பழுப்பு | பரிகாரம்: சனியை வணங்குங்கள்
நீ பொட்டு வச்ச தங்க குடம், ஊருக்கு மணி மகுடம் என உங்களை ஊரார் கொண்டி வரும் நிலையில், இன்று உங்கள் திறமையை நிரூபிக்க சந்தர்ப்பம் தேடி வரும். சக ஊழியர்களுடன் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் நவீன தொழில்நுட்பம் பயன் தரும். மாணவர்கள் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் மேலோங்கும். நெருங்கிய உறவினர்கள் ஆதரவாக இருப்பர். லக்கி எண்: 11 | லக்கி நிறம்: ஊதா | பரிகாரம்: துர்கையை பூஜிக்கவும்
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா என எந்த ஊருக்கு சென்றாலும் சொந்த ஊரின் பெருமையை பேசும் நீங்கள் இன்று புதிய தைரியத்துடன் செயல்படுவீர்கள். நெகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படக்கூடும். உங்கள் சிந்தனையை மற்றவர்கள் போற்றுவர். பயணங்களில் தாமதம் ஏற்படலாம். ஆனால் பின்விளைவுகள் நல்லதாகவே இருக்கும். அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து முடிவெடுக்கு ஏற்ற நாள். நெருங்கிய தோழிகள் ஆதரவாக இருப்பர். லக்கி எண்: 12 | லக்கி நிறம்: பச்சை நீலம் | பரிகாரம்: மஹா விஷ்ணுவை வணங்குங்கள்