Chaturgrahi Yoga to be formed after 50 years on Mahashivaratri 2025 : மஹாசிவராத்திரியில் 50 ஆண்டுகளுக்கு உருவாகும் சதுர்கிரஹி யோகத்தால் 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
மஹாசிவராத்திரியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் சதுர்கிரஹி யோகம் – 3 ராசியினருக்கு ஜாக்பாட்!
Chaturgrahi Yoga to be formed after 50 years on Mahashivaratri 2025 : ஜோதிட ரீதியாக கிரகங்களின் ராசி மாற்றங்கள் காரணமாக சுப மற்றும் அசுப பலன்களின் வாயிலாக மனிதர்களின் வாழ்க்கையில் கிரகங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் எல்லா ராசியினருக்கும் நன்மையும் நடக்காது, அதே போன்றுதான் எல்லா ராசியினருக்கும் தீமையும் நடக்காது. மேலும், ஒரு கிரகம் சாதகமான இடத்தில் இருந்தால் நன்மையும், இன்னொரு கிரகம் சாதகமற்ற திசையில் இருந்தால் கெடுபலன்களும் நடக்கும்.
25
மஹாசிவராத்திரியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் சதுர்கிரஹி யோகம் – 3 ராசியினருக்கு ஜாக்பாட்!
அப்படி ஜோதிடத்தில் 27 கிரகங்கள் இருக்கிறது. இந்த 27 கிரகங்களில் குரு, சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி ரொம்பவே முக்கியம். இந்த வருடம் இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சி நிகழ இருக்கிறது. அதுவும் வரும் மார்ச் மற்றும் மே மாதங்களின் இந்த கிரகங்களின் பெயர்ச்சி நிகழ்கிறது. அதற்கு முன்னதாக பிப்ரவரி 26ஆம் தேதி வரும் மஹாசிவராத்திரி எந்தெந்த ராசியினருக்கு என்ன பலன் என்று பார்க்கலாம். மஹாசிவராத்திரி நாளில் சூரியன், புதன், சந்திரன், சனி ஆகிய கிரகங்களின் சேர்க்கை கும்ப ராசியில் நிகழ்கிறது. இந்த 4 கிரகங்களின் சேர்க்கை காரணமாக சதுர்கிரஹி யோகம் உருவாகிறது. இந்த சதுர்கிரஹி (சதுர்கிரக) யோகம் 50 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் நிலையில் இந்த 3 ராசியினருக்கு தாக்கத்தை ஏற்படுத்த போகிறது.
35
மிதுன ராசிக்கான சதுர்கிரஹி யோக பலன்:
கும்ப ராசியில் புதன், சனி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் சதுர்கிரஹி யோகம் மிதுன ராசிக்கு 9ஆவது வீட்டில் நிகழ்கிறது. இதன் காரணமாக மிதுன ராசியினருக்கு வெளிநாட்டு யோகம் தேடி வரும். வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லலாம். மகன் அல்லது மகளுக்கு வெளிநாட்டு வரன் அமையலாம். அலுவலத்தில் அடுத்தடுத்து வேலைகளை முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வேலையில் முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சுப காரியங்கள் நிகழும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
45
துலாம் ராசிக்கான சதுர்கிரஹி யோக பலன்:
கும்ப ராசியில் 4 கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் சதுர்கிரஹி யோகத்தால் துலாம் ராசியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க பெறுவீர்கள். உங்களது ஆசைகள் யாவும் நிறைவேறும். வெளிநாட்டு யோகம் தேடி வரும்.
55
மகரம் ராசிக்கான சதுர்கிரஹி யோக பலன்:
புதன், சனி, சந்திரன் மற்றும் சூரியன் கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் சதுர்கிரஹி (சதுர்கிரக) யோகத்தால் மகரம் ராசியினருக்கு எதிரிகள் தொல்லை நீங்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படும். நீதிமன்ற வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். வெளிநாட்டு யோகம் தேடி வரும். குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.