Best Day to Buy a Broom: துடைப்பம் வாங்க சிறந்த நாள் எது? இந்த நாளில் வாங்கினால் மகாலட்சுமி அருள் கிடைக்கும்

Published : Jul 28, 2026, 08:31 AM IST

Best Day to Buy a Broom: பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, துடைப்பம் வீட்டின் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி செல்வ வளத்தை ஈர்க்கும். புதிய துடைப்பத்தை வாங்கும் நாள், அதை வீட்டில் வைக்கும் இடம், பழைய துடைப்பத்தை எப்போது அகற்ற வேண்டும் போன்றவற்றை பார்க்கலாம்.

PREV
15
துடைப்பம் வாங்கச் சிறந்த நாள்

வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டின் அமைப்பு, அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவற்றில் துடைப்பம் ஒரு முக்கியமான பொருளாகக் கருதப்படுகிறது. பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, துடைப்பம் வீட்டிலுள்ள அசுத்தத்தையும் எதிர்மறை ஆற்றலையும் அகற்றுவதுடன், செல்வ வளத்திற்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதனால் புதிய துடைப்பத்தை வாங்கும் நாள் முதல் அதை பயன்படுத்தும் முறை வரை சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

25
மகாலட்சுமி அருள்

வாஸ்து நம்பிக்கைகளின்படி, இந்து நாட்காட்டியில் கிருஷ்ணபட்ச காலத்தில் புதிய துடைப்பம் வாங்குவது நல்லதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாளில் துடைப்பம் வாங்கினால் மகாலட்சுமியின் அருள் கிடைத்து, வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், தனித்தனியாக வாங்குவதற்கு பதிலாக கட்டாக (bundle) துடைப்பம் வாங்குவது கூடுதல் மங்களகரமானதாக சில பாரம்பரிய குறிப்புகள் தெரிவிக்கின்றன.

செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று உங்கள் ராசிக்கு வெற்றியா? சவாலா? முழு பலன்கள் படியுங்கள்

35
துடைப்பம் வாங்க உகந்த நாட்கள்

அதே நேரத்தில், சுக்லபட்சத்தில் புதிய துடைப்பம் வாங்குவதை சில வாஸ்து நம்பிக்கைகள் தவிர்க்கச் சொல்கின்றன. குறிப்பாக திங்கட்கிழமையில் புதிய துடைப்பம் வாங்குவது நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது. அதே போல் பழைய துடைப்பத்தை வியாழக்கிழமை அல்லது ஏகாதசி நாளில் தூக்கி எறிவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது. இந்த நாட்களில் துடைப்பத்தை அகற்றினால் மகாலட்சுமியின் அருள் குறையும் என்று நம்பப்படுகிறது.

45
துடைப்பம் எங்கே வைக்க வேண்டும்?

துடைப்பத்தை பயன்படுத்தும்போது சில விதிமுறைகள் குறிப்பிடப்படுகின்றன. உடைந்த அல்லது மிகவும் சேதமடைந்த துடைப்பத்தை பயன்படுத்துவது நல்லதல்ல என கூறப்படுகிறது. பூஜை அறையில், தெய்வ சிலைகளுக்கு அருகில் அல்லது சமையலறையில் துடைப்பத்தை வைக்கக் கூடாது என்பது ஒரு நம்பிக்கை. மேலும் விருந்தினர்கள் அமரும் இடத்தில் வெளிப்படையாக துடைப்பத்தை வைக்காமல், பிறரின் பார்வைக்கு எட்டாத சுத்தமான இடத்தில் வைத்திருப்பது சிறந்ததாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

கெட்ட நேரம் முடிஞ்சு போச்சு.. 3 ராசிகளின் அதிர்ஷ்ட கதவை தட்டப்போகும் கேது..

55
துடைப்பத்திற்கான வாஸ்து விதிகள்

மேற்கூறிய தகவல்கள் வாஸ்து சாஸ்திரம், பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் வசிஷ்ட சம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் உள்ளன. இவற்றிற்கு அறிவியல் ஆதாரங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories