கன்னி ராசிக்காரர்களுக்கு புதாதித்ய ராஜயோகம் சுப பலன்களை தர உள்ளது. தன ஸ்தானமான நான்காம் வீட்டில் இந்த யோகம் உருவாகிறது. கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பொன், பொருள், இன்பங்களை அனுபவிப்பீர்கள். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை நிகழும். வீட்டில் தங்க ஆபரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். தொழிலில் இருப்பவர்களுக்கு அதன் மூலம் லாபம் கிடைக்கும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் மற்றும் தந்தை வழி உறவுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். தாயார் வழியில் இருந்து பூர்வீக சொத்துக்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)