Budhan Peyarchi 2025: புதன் பகவான் அனுஷ நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆவதால் சில ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மையை அடைய இருக்கின்றனர். அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தில் புதன் பகவான் சுபகிரகமாக அறியப்படுகிறார். அவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, பகுப்பாய்வுத் திறன், தகவல் தொடர்பு, வணிகம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இந்த நிலையில் அவர் விருச்சக ராசியின் அனுஷ நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகி இருக்கிறார். நவம்பர் 20 ஆம் தேதி வரை அவர் அனுஷ நட்சத்திரத்தில் பயணிக்கிறார். அனுஷ நட்சத்திரம் சனிபகவானின் சொந்த நட்சத்திரமாகும். புதன் இந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது புத்திசாலித்தனமும், உறுதியான செயல்பாடும் மேம்படும். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
25
ரிஷபம்
புதனின் இந்த சஞ்சாரம் ரிஷப ராசிக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கைத் துணையுடன் உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்படையும். மொத்தத்தில் வாழ்க்கையில் நேர்மறையான திருப்புமுனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
35
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் சாதகமானதாக அமையும். உங்கள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வேலைகளில் புதிய பதவிகள் தேடி வரலாம். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் ஈட்டுவதற்கான புதிய வழிகள் திறக்கப்படும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உறவுகளில் பிணைப்பு அதிகரிக்கும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான கனவுகள் நிறைவேறும். வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். இது லாபகரமானதாக அமையும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமை உயரும். பணவரத்து சீராக இருக்கும். துணையுடன் நல்லிணக்கத்தை ஏற்படும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் ராஜதந்திரத்துடன் பேசி சிக்கல்களை தீர்ப்பீர்கள். உடல் ஆரோக்கிய மேம்படும். குழந்தைகள் மற்றும் பிறரிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள்.
55
விருச்சிகம்
அனுஷ நட்சத்திரம் விருச்சிக ராசியில் அமைந்திருப்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். நிதி ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உருவாகும். பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைகள் ஊக்குவிக்கப்படும். ஒரு குழுவிற்கு தலைமை தாங்கும் பொறுப்புகள் கிடைக்கலாம். உங்களின் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். இலக்குகளை அடைவதில் வெற்றி கிடைக்கும். உங்கள் பேச்சில் நம்பகத்தன்மையும், ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். இதன் காரணமாக மக்களை ஈர்ப்பீர்கள். தகவல் தொடர்பு திறன் மேம்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் பிறக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)