Birth Dates Numerology: எண்கணித ஜோதிடத்தின்படி சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பார்களாம். ஒருவர் மீது பிரியம் கொண்டால் பிரியவே மாட்டங்களாம். அவை எந்தெந்த தேதிகள் என பார்ப்போம்.
ஒருவரின் பிறந்த தேதி அவர்களின் குணம், குடும்ப உறவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமாம். குறிப்பாக சில தேதிகளில் பிறந்தவர்கள் அன்பு, பாசத்துக்கு கட்டுப்பட்டு விட்டால் பிரியவே மாட்டார்களாம். தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் கடைசி வரை வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என நினைப்பார்களாம். இவர்கள் எந்த தேதிகளில் பிறந்தவர்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
24
2 ஆம் தேதி பிறந்தவர்கள்
எந்த மாதத்திலும் 2-ஆம் தேதி பிறந்தவர்கள் மனதளவில் ரொம்ப சென்சிடிவ்வா இருப்பாங்களாம். மற்றவர்கள் சொல்ற சின்ன வார்த்தை, சின்ன நடவடிக்கை கூட இவங்கள ஆழமா பாதிக்கும். ஆனால் இதே குணம் தான் இவங்க அன்பை ரொம்ப நேர்மையாவும், தீவிரமாவும் மாற்றுகிறது. ஒருத்தரை நம்பி விட்டால் அவங்களை முழுதாக மனசுக்குள் ஏத்துக்குவாங்க. உறவுகளில் ரொம்ப நம்பிக்கைக்குரியவங்களாக இருப்பாங்க. இவங்களுக்கு ஒரு உறவை முறிப்பது ரொம்ப கஷ்டமான விஷயம்.
34
6 ஆம் தேதி பிறந்தவர்கள்
எந்த மாதத்திலும் 6-ஆம் தேதி பிறந்தவங்க அன்பு, குடும்பம், உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. ஒருத்தர்கிட்ட நெருக்கமாகி விட்டால் அந்த உறவைக் காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் போவாங்க. இவங்க அன்பை வெறும் உணர்வாக பார்க்காம, ஒரு பொறுப்பாக பார்ப்பாங்க. அதனால இவங்களோட இருக்கிற பந்தம் ரொம்ப வலுவாக இருக்கும். ஆனால் ரொம்ப எமோஷனல் என்பதால் யாராவது கண்டுக்காம விட்டாக்கூட மனசு ஆழமாக காயப்படும்.
7 ஆம் தேதி பிறந்தவர்கள்
7-ஆம் தேதி பிறந்தவங்க பெரும்பாலும் உள்முக சிந்தனை கொண்டவங்களாக இருப்பாங்க. நிறைய யோசிப்பாங்க. இவங்க வெளிப்படையாக உணர்ச்சிகளைக் காட்டா விட்டாலும் மனசுக்குள்ள ரொம்ப ஆழமாக உணர்வாங்க. ஒருத்தரோட பழக ஆரம்பித்தால் அந்த உறவை ரொம்ப கவனமாவும் பொறுப்பாவும் காப்பாத்துவாங்க. இவங்க நம்பிக்கையைப் பெறுவது கொஞ்சம் கஷ்டம். ஆனால் ஒருமுறை நம்பிக்கை வந்து விட்டால் அது ரொம்ப வலுவானதாக இருக்கும்.
எந்த மாதத்திலும் 11-ஆம் தேதி பிறந்தவங்களுக்கு ஒருவிதமான ஸ்பெஷல் எமோஷனல் பவர் இருக்குமாம். இவங்களும் ரொம்ப சென்சிடிவ். மத்தவங்களோட உணர்வுகளை சுலபமாக புரிஞ்சுக்குவாங்க. சின்ன விஷயத்தைக் கூட அதிகம் யோசிக்கிற குணம் இவங்களுக்கு உண்டு. ஒருத்தரோட மனரீதியாக கனெக்ட் ஆகி விட்டால் அந்த நபரை அவங்க வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தில் வைப்பாங்க. அன்பு என்று வந்து விட்டால் ரொம்ப ஆழமாக போயிடுவாங்க.