Budhan Vakra Peyarchi 2026: கிரகங்களின் இளவரசர் என்றும், புத்தி கூர்மை, பேச்சாற்றல், வணிகம் மற்றும் தகவல் தொடர்பின் அதிபதியாகவும் புதன் பகவான் போற்றப்படுகிறார். எனவே, அவரது இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ராசி பலன்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக நவகிரகங்கள் தனிச்சந்நிதியில் ஆளுக்கொரு திசை பார்த்துக்கொண்டு எழுந்தருளியிருப்பார்கள். ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு பலன்களை கொடுக்கிறது. குறிப்பாக கிரகங்களின் இளவரசர் என்றும், புத்தி கூர்மை, பேச்சாற்றல், வணிகம் மற்றும் தகவல் தொடர்பின் அதிபதியாகவும் புதன் பகவான் போற்றப்படுகிறார். எனவே, அவரது இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ராசி பலன்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
26
புதன் வக்ர பெயர்ச்சி
அந்த வகையில் ஜூன் 29 அன்று இரவு 11:05 மணி முதல் ஜூலை 24 அன்று அதிகாலை 4:27 மணி வரை, கிட்டதட்ட 25 நாட்களுக்கு புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சியில் இருக்கப்போகிறார். இந்த பெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கீழே உள்ள 4 ராசிக்காரர்கள் மட்டும் பம்பர் பலன்களையும், கூடுதல் நன்மைகளையும் பெறப்போகிறார்கள்.
மேஷ ராசியின் 4-ம் வீட்டில் இருப்பதால் வீடு, குடும்பம் மற்றும் நல்லிணக்கம் இந்த வக்ர பெயர்ச்சி நடக்கிறது. அலுவலகச் சூழல் சாதகமாக மாறும். மேலதிகாரிகளின் பாராட்டும், வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் கிடைக்கும். கடந்த கால முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த நல்ல லாபம் தேடி வரும். நீண்ட நாள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறைப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணமாகாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நபர் அறிமுகமாக வாய்ப்புண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சுவாரஸ்யமான ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் பயணங்கள் இப்போது எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்கப்போகிறது.
கடக ராசியின் லக்கினத்தில் புதனின் வக்ர பெயர்ச்சி அமைவதால் இவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி காத்திருக்கிறது. வருமானம் கணிசமாக உயர்வதோடு, எதிர்கால சேமிப்பும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆடை, ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டும் வேளையில் ஆரோக்கியமும் ஒத்துழைக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பதவி உயர்வு மற்றும் வேலையில் அபார வெற்றி கிடைக்கும்.
56
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9-ம் வீட்டில் புதனின் வக்ர பெயர்ச்சி நிகழவுள்ளது. நிதி நிலைமை அசுர வேகத்தில் வலுப்பெறும். நீண்ட நாட்களாகக் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த கடன் பிரச்சினைகள் முற்றிலும் முடிவுக்கு வரும். வியாபாரிகளுக்கு இது மிக உன்னதமான பொற்காலம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும், சக ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் நீங்கி, மனநிறைவும், மகிழ்ச்சியும், சிறந்த ஆரோக்கியமும் உண்டாகும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
66
மீனம்
மீன ராசியின் 5-ம் வீட்டில் புதனின் வக்ர பெயர்ச்சி அமைகிறது. மாணவர்கள் தங்களது படிப்பில் பெரிய சாதனைகளையும், வெற்றிகளையும் அடையப்போகிறார்கள். வியாபாரிகளுக்குப் பிரம்மாண்ட லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்விலும், தொழிலிலும் பல பாசிட்டிவான திருப்புமுனைகள் ஏற்பட்டு நினைத்த காரியம் கைகூடும். ஆரோக்கியமும் மிகச் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பண வரவு மற்றும் நிதி நிலைமையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.